'பச்சிளம் குழந்தையை புதைத்த தாய்.. பதறி ஓடி காப்பாற்றிய நாய்'.. நெகிழவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்தேறியுள்ளது.

தாய்லாந்தில் உள்ளது சும்பாங்க என்கிற கிராமம்.  இந்த கிராமத்தைச் சேர்ந்த 15 வயதேயான இளம் பெண், தான் பெற்றெடுத்த ஆண் குழந்தையினை ஏதோ காரணத்துக்காக வயல்வெளியில் சென்று பச்சிளம் சிசு என்று கூட பாராமல் குழிதோண்டி புதைத்து கொடூரமான காரியத்தைச் செய்துள்ளார்.

ஆனால் அந்த பெண் செய்யும் காரியத்தை எதேச்சையாக பார்த்த நாய், அங்கு விரைந்துள்ளது. அதற்குள் அந்த பெண் ஓடிவிடவும், நாய் வெகுவேகமாக அந்த குழியைத் தோண்ட முயன்று, மேற்கொண்டு முடியாமல் குரைக்கத் தொடங்கியது. சுற்றியிருக்கும் யாரேனும் உதவிக்கு வந்தால், குழந்தையைக் காப்பாற்றி விடலாம் என்கிற நாயின் தவிப்புதான் அதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.

அதன் பின், நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த நாயின் உரிமையாளருமான கால்நடை வளர்ப்பாளர் உஷா நிஷைக்கா, நாய் காட்டிய இடத்தில் தோண்டியபோது குழந்தையின் பாதத்தைக் கண்டு மிரண்டு போயுள்ளார். அப்போது குழந்தையை உடனடியாக வெளியில் எடுத்து உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

இதுபற்றி அறிந்து குழந்தையின் தாயைக் கைது செய்து விசாரித்த போலீஸார், 15 வயதேயான தனக்கு பெற்றோருக்குத் தெரியாமல் பிறந்த குழந்தைதான் இது என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறியுள்ளார். இதனிடையே குழந்தையைக் காப்பாற்றிய பிங் பாங் என்ற பெயருடைய நாய், ஒரு கால் அடிபட்ட நிலையில் 3 கால்களுடன் நடமாடி வந்ததாகவும் பலவழிகளிலும் பலருக்கும் இப்படி உதவி செய்து, அந்த பகுதியின் ஹீரோவாக மாறி வருவதாகவும் அனைவராலும் பாராட்டப்பட்டு  வருகிறது.

DOGSLIFE, MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்