சென்னையில் நடந்த முக்கியமான மாற்றம்.. 2017 to 2022.. வீதிகளும்.. வீடுகளும்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |


சென்னை:   சென்னையை விட்டு 2016 டிசம்பர் 31ம் தேதி வெளியில் சென்றேன்.. மீண்டும் சரியாக 4 வருடம் கழித்து அண்மையில் சென்னை சென்றேன்..  அங்கு நான் கவனித்த முக்கியமான மாற்றம், தனி வீடுகள் பல அடுக்குமாடி வீடுகளாக மாறி இருந்ததுதான். சென்னையில் வீதிகளும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில்  பெரிய மாற்றத்தையும் சந்தித்து இருந்தது.

Advertising
>
Advertising

சென்னை வந்தாரை வாழவைக்கும் என்று சொல்வார்கள்? உண்மை தான்.. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தான்.   சினிமா நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தது முந்தைய தலைமுறை..   சார்ப்ட்வேர் இன்ஜினியர் ஆக வருகிறது இன்றைய தலைமுறை..  அன்று எப்படி என்று தெரியாது. ஆனால் இன்று வாகனங்கள் செல்லாத 30 வினாடியை சென்னையின் எந்த சாலையையும், எந்த நேரத்தில் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு நெருக்கடி வரும் அளவிற்கு மக்கள் பெருக்கம் அதிகரித்து விட்டது.

சென்னையில் நான் இருந்த ( 2010 முதல் 2017 வரை)  8 ஆண்டுகளில் தனி வீடுகளும், அடுக்குமாடிகளும் சம அளவில் இருக்கும். ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து 2021 இறுதியில் நம்ப முடியாத மாற்றத்தை சென்னை சந்தித்து இருப்பதை கண்கூடாக கண்டேன். எத்தனை பாலங்கள் போட்டாலும் போக்குவரத்து நெரிசல் குறையாத வடபழனி,  மூச்சுக்கூட விடமுடியாமல் அவதிப்படும் கத்திபாரா மேம்பாலம்,  தண்ணீரை தள்ளமுடியாமல் தவித்த மெரினா கடற்கரை (வெள்ளம்) எப்போதும் பரபரப்பாகவே காணப்பட்டது,

அடுக்குமாடிகள்

அம்பத்தூர் முதல் தாம்பரம் வரை, கந்தன்சாவடி முதல் கோயம்பேடு வரை, மெரினா முதல் வடபழனி வரை பயணித்து பார்த்தேன். திடீரென நின்று போன கடிகாரம், மீண்டும் பேட்டரி போட்டது போல் மனம் சுற்றியது. எல்லாமே  மலரும் நினைவுகள்..  சரி விஷயத்துக்கு வருவோம். 2010 இல் இருந்தை விட 2017ல் அடுக்குமாடிகள் தாறுமாறாக அதிகரித்தது. ஆனால் பிளாட் என்பது சென்னையின் புறநகர் பகுதிளில் தான் அதிகம் இருக்கும். நகரங்களுக்குள் ஓரளவே அடுக்குமாடிகள் இருக்கும். சென்னையில் தனி வீடுகளும் பரவலாக இருக்கும்.

தனி வீடுகள்

ஆனால் இப்போது நிலைமை அப்படியே வேறாக மாறிவிட்டது..  எவ்வளவு பெரிய பணக்காரர்களும் தங்கள் இடத்தை அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட கொடுத்துவிட்டார்கள் என்பது பார்த்த உடன் புரிந்து விட்டது. தனி வீடுகளை பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. சென்னையின் முக்கியமான நகர்பகுதிகளில் பல இடங்களில் தனி வீடுகள் அப்பார்ட்மெண்டுகளாக உருவெடுத்து இருந்தை பார்த்தேன். ஒரு குடும்பம் இருந்த வீடுகளில் 24 குடும்பங்கள், 50 குடும்பங்கள், 10குடும்பங்கள் என காங்ரீட் காடுகளாக மாறிக்கிடந்தன.  வானுயர்ந்த அடுக்குமாடிகள் அன்னார்ந்து பார்த்தால் கழுத்து வலி எல்லாம் பறந்து போய்விடும் என்கிற அளவில் இருந்தன.

வீதிகள்

ஒரு குடும்பம் குடியிருந்த போது  1 கோடியாக இருந்த வீட்டின் மதிப்பு,  அடுக்குமாடியாக மாறிய போது, ஒவ்வொரு வீடும் ஒரு கோடி என்று 25 கோடியாக அதிகரித்து இருந்தை பார்க்க முடிந்தது.  அதாவது பிளாட் அடுக்குமாடி குடியிருபபு ஒரு கோடி என்பது சென்னையில் சர்வசாதாரணமாகி விட்டது. தனி வீடுகள் சென்னையில் மெல்ல மறைய தொடங்கிவிட்டதை உணர்ந்தது மனம். சென்னையில் மறைய தொடங்கியது தனி வீடுகள் மட்டும் அல்ல... வீதிகளும் தான். நடக்கவே முடியாத அளவிற்கு வாகனங்கள் அதிகரித்து இருந்தது. 

சாலைகள்

பளபளக்கும் சாலைகளாக இருந்தாலும்  வெள்ளம் வடிய வடிகால்கள் இல்லாத நிலை பல இடங்களில் இருந்தன.  சென்டர் மீடியன்கள் செக் போஸ்ட் போட்டு  மறித்தது வாகனங்களை மட்டுமல்ல. தண்ணீரையும் தான்.  ஸ்விகிக்களும், சொமோட்டாக்களும் அதிவேமாக சுமந்து சென்றது பலரது உணவை மட்டுமல்ல.. பசியையும் தான் என்பது என் மனத்திற்கு புரிந்தது.   அடுக்குமாடிகளின் மெயின் கேட்கள் மட்டுமல்ல, அங்கு நின்ற வாட்ச்மேன்களும் ஒய்வுக்காக காத்திருப்பது.. பார்த்த உடனே தெரிந்தது.  

சிவப்பு விளக்குகள்

நகர் முழுவதும் சிவப்பு விளக்கும், பச்சை விளக்குகளையும்  அணிந்தபடி நின்ற கம்பங்கள்,   வாகனங்களை நிறுத்தியும், வழி அனுப்பியும் கொண்டிருந்தன.அந்த கம்பங்கள் கால் வலிக்கிறது, கொஞ்சம் உட்காரட்டுமா என்று கேட்பது போல் உணர்ந்தேன்.  கொஞ்சம் கனவு கலைந்து பார்த்த போது தான் தெரிந்தது. கேட்பவர் காவலர் என்று... அப்போது எரிந்த சிவப்பு விளக்கு, வாகனங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் போட வேண்டிய தேவையை காட்டியது.  அடுத்தது என்ன.. அடுக்குமாடி உலகமாய் அடுத்த தலைமுறை வளருவதை பார்த்து ஆசுவாசப்பட்டு கொண்டு , அரசு பஸ்ஸில் புறப்பட்டேன் தேனிக்கு.. ஜன்னல்கள் கம்பிகள் மூடிவிட்டு கண்ணயர்ந்து  காலையில் பார்த்த போது... நான் கண்டது சூரியன் அல்ல.. மேற்கு தொடர்ச்சி மலையை.. ரம்மியான மலைகள் மழையை..  சுமந்தபடி வரவேற்றன.  முடிந்தது பேருந்து பயணம் மட்டுமல்ல.. சென்னை நினைவுகளும் தான்!

CHENNAI, CHENNAI APARTMENT, சென்னை, அடுக்குமாடி குடியிருப்பு, சென்னை சாலைகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்