'இப்ப அவள விடப்போறியா இல்லயா? உன்ன..'.. 'முதலையுடன் சண்டையிட்டு தோழியைக் காப்பாற்றிய 11 வயது சிங்கப்பெண்!'

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

ஜிம்பாப்வே நாட்டின் சின்டெரெலா என்கிற கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள் அங்குள்ள ஏரியில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது டோயா முவாமி என்கிற 9 வயதுச் சிறுமியை யாரோ தண்ணிக்குள் இருந்து இழுப்பதுபோல் இருந்துள்ளது. உடனே சிறுமி கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்தபடி கத்தியுள்ளாள்.

இதைக் கண்ட நண்பர்கள் அருகில் சென்று பார்த்தபோதுதான் டோயாவின் கால்களை முதலை கவ்விக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே ரெபாக்கா என்கிற இன்னொரு 11 வயதுச் சிறுமி துணிச்சலுடன் பாய்ந்து, முதலையுடன் சண்டையிட்டு டோயாவை காப்பாற்ற முனைந்துள்ளார்.

ஆனாலும் முதலை விடாப்பிடியாக இருந்ததை அடுத்து, முதலையின் கண்களைக் குறிவைத்து தாக்கி, முதலையை நிலைகுலைய வைத்துள்ளார் ரெபாக்கா. பிறகு முதலை டோயாவின் கால்களை விட்டுவிட்டது. டோயாவை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டு வந்து கரையில் சேர்த்தாள் சிறுமி ரெபாக்கா.

முதலையிடம் கடிபட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,  இதுபற்றி பேசிய ரெபாக்கா ‘எங்க குரூப்லயே நான்தான் சீனியராச்சா.. அதனால யாரையும் நம்பாம நானே துணிச்சலாக இறங்கி சிறுமியை காப்பாத்த வேண்டியதா போச்சு’என்று கூறியுள்ளார்.

CROCODILE, LITTLE GIRL, SAVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்