“வலிகளுக்கு நடுவே ஒரு ஆனந்தத் தாண்டவம்”.. வைரலாகும் சிறுவனின் ஆட்டம்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட பிறகு சிறுவன் ஒருவன் தன்னை மறந்து மருத்துவ வார்டிலேயே ஆடும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

எப்போதெல்லாம் மனம் சோர்வாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் நமக்கு நாமே உற்சாகம் கொடுத்துக்கொண்டு அதைக் கடந்து போகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சிறுவன் ஒருவன் தனது இயல்பான ஆட்டத்தினால் உணர்த்தியதால் இணையத்தின் மூலம் பலரது இதயத்திலும் இடம் பிடித்துள்ளான்.

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்த சிறுவன் அஹமது, கன்னி வெடியால் பாதிக்கப்பட்டு ஆஃப்கானின் ஐசிஆர்சி மருத்துவக் குழுவினரின் மருத்துவ வார்டில் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இதனிடையே, அந்த செயற்கைக் கால்களைக் கொண்டு, உற்சாகமாய் சுற்றிச் சுற்றி ஆடும் சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைக் கண்டவர்கள் பலரும், சிறுவனின் கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் பார்த்து, தங்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாக்கியதாவும், சிலர் அழுகையே வந்துவிட்டதாகவும், பலர் சிறுவனின் இந்த் ஆட்டத்தைக் கண்டு தன்னம்பிக்கையாய் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

VIDEO, VIRALVIDEO, VIDEOVIRAL, AFGHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்