'Irfan Views' இர்ஃபானுக்கு கிடைத்த விருது! மேடையில் Vijay Tv புகழும் இர்ஃபானும் செய்த அட்ராசிட்டி!..

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

கடந்த 7 வருடங்களாக  Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா வெற்றிகரமாக நிகழ்ந்துவருகிறது.

இதன் அடுத்த கட்ட இன்னோவேடிவான நகர்வாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) இன்று (மார்ச் 7-ஆம் தேதி) வழங்கப்படுகின்றன.

இதில் Irfan Views இர்ஃபானுக்கு THE BEHINDWOODS GOLD BEST DIGITAL CONTENT CREATORக்கான Behindwoods Gold Digital & TV Awards வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை பிரபல ரேடியோ ஜாக்கி, நடிகர் என பன்முகங்களைக் கொண்டு டிஜிட்டல் மீடியா பிரபலமான ஆர்.ஜே. ஷா இர்ஃபானுக்கு வழங்கி கவுரவித்தார்.  

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இர்ஃபான், தமது சகோதரியின் குழந்தையையும் மேடையில் அழைத்து வந்து மகிழ்ச்சியுடன் விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த குழந்தை இர்ஃபான் வீடியோக்களில் வருவதை பலரும் பார்த்திருக்கலாம்.

2016-ஆம் ஆண்டுக்கு பின்னர் தனது சொந்த சேனலில் திரைப்பட விமர்சனங்களை செய்ததன் பின்னர் வெவ்வேறு உணவகங்களில் வெவ்வேறு உணவுகளை உண்டு ருசித்து அவற்றைப் பற்றிய தன்னுடைய கருத்துக்களை ஜாலியாக பகிர்ந்து வந்தார்.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே உணவகங்களையும் உணவுகளையும் பற்றிய குறிப்புகளையும் விமர்சனங்களையும் தனது சேனல் வாயிலாக கொடுத்து வந்தார். இந்நிலையில் விருது வாங்கிய கையுடன் விஜய் டிவி நடிகர் புகழுடன் சேர்ந்து இர்ஃபான் பக்கெட் பிரியாணி சாப்பிட்டு மேடையில் டான்ஸ் ஆடியுள்ளார். 

வெவ்வேறு இடங்களில் இருக்கும் விதவிதமான உணவகங்கள் மற்றும் உணவுகள் பற்றி அறிய வேண்டுமானால் ஒருவர் இர்ஃபான் வியூவ்ஸ் சேனலை போய் பார்த்தாலே போதும ஐடியா கிடைக்கும் என்கிற அளவுக்கு கலாட்டா நிறைந்த இவரது நிகழ்ச்சிகள் யூடியூப் தளங்களில் பிரபலம்.

மற்ற செய்திகள்