'ஆம்புலன்சும் வர்ல.. அக்கம் பக்கத்தினரும் வர்ல'.. ஊரடங்கு உத்தரவு நாளில் கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ டிரைவர்!
முகப்பு > செய்திகள் > கதைகள்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நாளில், பிரசவ வலியால் துடித்தபெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு ரிஸ்க் எடுத்து கொண்டுசென்ற ஆட்டோ டிரைவர் மக்பூல் நாடு முழுவதும் கவனம் பெற்று பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
அஸாம் மாநிலத்தின் ஹலாகண்டி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இருவேறு பிரிவினருக்குமிடையே உண்டான மோதல் கலவரமாக மாறியதில் ஒருவர் கொல்லப்பட்டார். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, வாணிப நிறுவனங்களுக்குள் புகுந்து பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. ஆங்காங்கே தீவைக்கப்படவும் செய்தனர்.
இதனையடுத்து, மாநிலத்தில் பதற்றம் நிலவத் தொடங்கியதும் ஒழுங்கு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போதுதான் நந்திதா என்பவருக்கு பிரசவ வலி உண்டானது. ஆம்புலன்சுக்கு போன் செய்தும், ஆம்புலன்ஸ் வரவில்லை. அக்கம் பக்கத்தினரும் உதவ முன்வராத சமயத்தில் நந்திதாவின் கணவர் ரூபான் தவித்தார். இதனை அறிந்த அப்பகுதி ஆட்டோ டிரைவர் மக்பூல் துணிச்சலுடன், ஆட்டோவை ஓட்டிக்கொண்டு அங்கு சென்றுள்ளார்.
பின்னர் மக்பூல் உரிய நேரத்தில் நந்திதாவை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சாந்தி என்று பெயர் சூட்டப்பட்டது. இதுபற்றி பேசிய நந்திதாவின் கணவர், இருதரப்புக்கும் இடையில் அமைதி நிலவவே, சாந்தி என்று தன் மகளுக்கு பெயர் சூட்டியதாக பேசினார். இதேபோல் ஆட்டோ டிரைவர், மக்பூல் பேசும்போது, நந்திதாவிடம் கவலைப்படாதீர்கள், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறிக்கொண்டே வந்ததாகவும், இறைவன் அருளால் இனிதே நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்'... தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்!
- “அட இதல்லவா மனிதநேயம்”!.. ரமலான் நோன்பை பார்க்காமல் நோயாளிக்கு ரத்தம் கொடுத்த இளைஞர்! நெகிழ்ச்சியூட்டும் செயல்!
- 'மாட்டுக் கறி விக்கறயா? அப்டீன்னா பன்றி இறைச்சி சாப்பிடு'.. முதியவர் மீது தாக்குதல்!
- பாராட்டுக்களை அள்ளிய காவலர்... கொட்டும் மழையிலும் இடைவிடாதப் பணி... வைரலாகும் வீடியோ!