‘திடீரென தீப்பிடித்த பில்டிங்.. 7 புளோர்களிலும் 14 பேர்’.. ஹீரோவான 19 வயது கிரேன் ஆபரேட்டர்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

சீனாவில் கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருந்த 7  அடுக்கு மாடிக்கட்டடத்தில் இருந்த மக்களை கிரேன் ஆபரேட் செய்யும் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரை பணையம் வைத்து காப்பாற்றியுள்ள சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளத்து.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் 7 அடுக்கு மாடிக் கட்டடத்தின் கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலைகள் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அங்கு தீப்பற்றத் தொடங்கியது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அடுத்தடுத்த புளோர்களுக்கும், அறைகளுக்கும் தீப்பரவத் தொடங்கியது.

வேலை செய்துகொண்டிருக்கும்போது திடீரென தீப்பற்றியதோடு, உடனடியாக பரவத் தொடங்கியதால், பயத்திற்குள்ளான மக்கள் அனைவரும் தங்கள் உயிருடமைகளைக் காக்கவும், குழந்தைகளை காக்கவும் முற்பட்டனர். ஆனாலும் தீயானது பெரும் புகைமண்டலத்துடன் வலுவாக உருமாறியது.

இந்த நேரத்தில்தான் ஆபத்பாந்தவன் போல், அங்கு கீழ்தளத்திற்கு அருகே, பில்டிங்குக்கு வெளியே பணிபுரிந்துகொண்டிருந்த கிரேன் ஆபரேட்டர் லான் ஜூன்ஸ் ஹீரோவாகியிருக்கிறார். ஆம், மக்களைக் காப்பாற்ற சாகசம் செய்பவர்கள் ஹீரோதானே? அவ்வகையில் 7 அடுக்கு மாடிக் குடியிருப்பில் 2வது புளோரில் இருந்து 7வது புளோர் வரை இருந்த மக்களை தனது கிரேனை, உதவிக்கரம் போல் நீட்டி அவர்களை தாங்கி தரையிறக்கி காப்பாற்றியுள்ளார் லான் ஜூன்ஸ்.

தன் உயிரைக் கூட எண்ணிப் பார்க்காமல் 19 வயதில் 14 பேரை இந்த விபத்தில் இருந்து காப்பாற்றிய தன்னை பலரும் பாராட்டுவதாகவும்,  இதனைச் செய்யும்போது தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும், தற்போது அனைவரும் பாராட்டும்போதுதான் பெருமிதமாக உணர்வதாகவும் லான் ஜூன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

CRANEOPERATOR, CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்