“பூமிய விட பெருசு!”.. “இண்டர்ன்ஷிப்க்கு வந்த ஸ்கூல் பையன் கண்டுபிடிச்சுட்டான்!”.. “நேர்மையாக அறிவித்த நாசா!”

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம், டிரான்ஸிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (டெஸ்) என்கிற உபகரணத்தின் மூலம் நட்சத்திர மண்டலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தகுதியான புதிய கோள் ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பிளானட் ஹண்டர்ஸ் டெஸ் குடிமகன் அறிவியல் திட்டத்தின் கீழ், மூன்று நாள் கோடைகாலப் பயிற்சிப் பயிலரங்கிற்காக நாசாவிற்கு வந்த 17 வயதேயான, நியூயார்க் ஜூனியர் ஸ்கூல் முடித்த மாணவர் குக்கியர் என்பவர்தான், நாசாவின் ஆய்வுப் பயணத்துக்கான டெஸ் தொலைநோக்கி உபகரணம் கொண்டு, பூமியை விட 6.9 மடங்கு பெரியதும், பூமியிலிருந்து 1,300 ஒளிஆண்டுகள் தொலைவிலும் உள்ள  TOI 1338 b என்கிற, உயிர் வாழத் தகுதியான புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளதாக நாசா வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

இதுபற்றி பேசிய குக்கியர்,  டெஸ் உபகரணத்தின் உதவியோடு நட்சத்திர ஒளியின் மாறுபாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, வானமண்டலத்தில் இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றையொன்று வட்டமிட்டதைக் காணமுடிந்ததாகவும், ஆனால் இந்த 3 நாட்களுக்குள் TOI 1338 என்ற அமைப்பிலிருந்து ஒரு சமிக்ஞையைக் கண்டதாகவும் அப்போதுதான் நட்சத்திர மண்டலத்தில் ஒரு புதிய கோள் இருப்பதை அறிந்து நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

STUDENT, PLANET, SCIENCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்