11 வயசு பார்வை குறைபாடுள்ள சிறுவனை CEO-வாக நியமித்த பிரபல நிறுவனம்.. கலங்க வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

பார்வை குறைபாடுள்ள 11 வயது சிறுவனை ஒருநாள் CEO வாக பதவியளித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது போட் (Boat) நிறுவனம். இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | இன்னும் படிப்பையே முடிக்கல.. அதுக்குள்ளே கூகுள் நிறுவனத்துல வேலை.. இந்தியாவுலயே ஒரு மாணவருக்கு இவ்வளவு சம்பளம் கிடைச்சது இல்லயாம்..!

பிரதமேஷ் சின்ஹா

இந்தியாவை சேர்ந்த பிரதமேஷ் சின்ஹா கண்பார்வை குறைபாடு கொண்டவர். 11 வயதான இவர், பார்வையில்லாதவர்கள் கல்வி கற்கும் நோக்கில், ‘Annie’ என்னும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார். இதன்மூலம் பரவலாக அறியப்பட்ட பிரதமேஷ் புதிய நிறுவனங்களை உருவாக்கும் நபர்கள் தனக்கு உத்வேகம் அளிப்பதாக கூறுகிறார். IAS ஆகவேண்டும் என்பதே தனது கனவு எனச் சொல்லும் இவர், நாட்டிற்கு சேவை செய்வது தன்னுடைய கனவு என்கிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 57,000 பேர் பின்தொடர்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாது, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் தன்னை விரும்புகின்றனர் என மகிழ்ச்சியோடு கூறுகிறார் பிரதமேஷ். இந்நிலையில் இவரை ஒருநாள் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்திருக்கிறது போட் நிறுவனம்.

ஒருநாள் CEO

போட் நிறுவனத்தின் இணை நிறுவனரான அமன் குப்தா, பிரதமேஷ் சின்ஹாவிற்கு சிறப்பு அழைப்பு ஒன்றை கொடுத்திருக்கிறார். இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரதமேஷை ஊழியர்களுக்கு அமன் குப்தா அறிமுகம் செய்துவைத்தார். அதன்பின்னர், ஒருநாள் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரதமேஷை நிர்ணயிப்பதாக அவர் சொல்ல, ஊழியர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.

வைரல் வீடியோ

போட் நிறுவனர் அமன் குப்தா, பிரதமேஷ் உடனான உரையாடலை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்,"கோடிக்கணக்கான முகங்களில் புன்னகையை வரவழைத்தவரைக் கொண்டாடுகிறோம். அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்கும் எங்கள் முயற்சிகளில் எங்களுடன் இணைந்திடுங்கள். தரமான கல்வியை பெற அவர் தகுதியுடையவர். அதற்காக அவருக்கு அளிக்கும் ஒருவித உதவியே இந்த முயற்சி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் பிரதமேஷ் உருக்கமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

VISUALLY IMPAIRED BOY, BOAT CEO

மற்ற செய்திகள்