'இனி ஆர்டர் பண்ணிட்டு டெலிவரி பாய்ஸ்க்காக வெயிட் பண்ண வேண்டாம்'.. ஸொமாட்டோ அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோ இந்தியா முழுவதும் இனி ட்ரோன்களிலும் உணவு டெலிவரி செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இணைய வழி சேவையாக, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவுடன் வாடிக்கையாளர்களுக்கான உணவினை கவனமாகக் கொண்டு சேர்க்கும் இந்த நிறுவனத்தின் முதன்மையான தூணாக இணையதளமும், இரண்டாவது தூணாக மனித வளமும் (உணவு டெலிவரி செய்யும் மனிதர்கள்) இருந்து வருகிறது.

தற்போது மேலும் ஒரு தூணாக தொழில்நுட்பம் கூடியுள்ளது. அதன்படி, மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ட்ரோன், 5 கிலோகிராம் வரையிலான உணவுப் பொருட்களை 5 கி.மீ தொலைவுக்கு 10 நிமிடத்துக்குள் டெலிவரி செய்யக்கூடியதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த சோதனையில் தெரியவந்தது.

உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடங்களிலும், பேரிடர் காலத்தில் மக்களுக்கான உணவுப்பொருட்களை கொண்டு சேர்க்கவும் இந்த ட்ரோன்கள் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிரில் இருக்கும் பொருட்களையும், எதிர்ப்படும் ஆட்களையும் கண்டுணரும் சென்சார் வசதிகளும் இந்த ட்ரோனில் இருப்பதால் இதன் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவையை நம்மூரிலும் காண முடியும்.

ZOMATO, FOOD, DELIVERY, DRONE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்