'நாங்களே 'ரேஷன்' பொருட்களை டெலிவரி பண்றோம்'...'சொமேட்டோ அதிரடி'... எப்படி பண்ண போறாங்க?
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நியாயவிலைக்கடை பொருட்களை நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் வகையில், சொமேட்டோ நிறுவனம் அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை அடியோடு முடங்கிப் போயுள்ளது. உலக அளவில் பொருளாதாரத்தில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது தான் சீனாவில் நிலைமை சரியாகத் தொடங்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 633 ஆக உள்ளது.
இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நியாயவிலைக்கடை பொருட்களை நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் வகையில் சொமேட்டோ நிறுவனத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக எர்ணாகுளம் காந்தி நகர்ப் பகுதியில் 8 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் வாரத்தில் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு இடையே மேலும் 17 இடங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால், சொமேட்டோ ஊழியர்கள் வீட்டிற்கே சென்று பொருட்களை விநியோகம் செய்வார்கள்.
மக்கள் வெளியே வர முடியாத சூழலில், அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதில் உள்ள சிரமத்தை இதன் மூலம் குறைக்க முடியும் எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- #UKlockdown: “இந்த கொடுமைலாம் பாத்தா.. கொரோனாவே கண்ணீர் விடும்!”.. ‘லாக்டவுன்’ நேரத்தில் ‘இளைஞர்கள்’ வீட்டில் பார்த்த ‘வேலை!’
- 'சவுதியில் இருந்து இந்தியா வந்த பெண்ணுக்கு... கொரோனா பரிசோதனை செய்த மருத்துவர்!'... குடும்பத்துக்கே நேர்ந்த கொடுமை!... கல் நெஞ்சையும் கரைய வைக்கும் துயரம்!
- 'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்!
- தொடர்ந்து 'துரத்தும்' துயரம்... கொரோனாவுக்கு சிகிச்சையளித்த '37 மருத்துவர்கள்' மரணம்!
- நோயாளிகளுக்கு 'சிகிச்சை' அளித்த டாக்டர்... 'குடும்பத்துடன்' கொரோனா பாதிப்புக்கு ஆளான துயரம்!
- ஈரோடு 'மல்லியிலும்' கைவைத்த கொரோனா... 'வேதனையால்' புலம்பும் விவசாயிகள்!
- 'மது' அருந்துவது 'கொரோனா' தொற்றை தடுக்குமா?... உலக 'சுகாதார' அமைப்பு விளக்கம்!
- 10-ம் வகுப்பு 'தேர்வு' எழுதிய மாணவனுக்கு... 'கொரோனா' தொற்று!
- 'இந்த' மருந்து 'வொர்க்' ஆகுது... கொரோனாவில் இருந்து 'மீண்ட' நபர்!
- WATCH VIDEO: ‘கலங்கடிக்கும் துன்பம்’... ‘முடங்கிக் கிடக்கும் நியூயார்க் நகர மக்களுக்கு’... 'அட்சயப் பாத்திரமான இந்தியர்கள்'!