’ஆன் லைனில் ஆர்டர் செய்ததோ பன்னீர் மசாலா’... 'வந்ததோ, வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பன்னீர் மசாலாவுக்குப் பதில், சிக்கன் மசாலா விநியோகித்த விவகாரத்தில், புனே நுகர்வோர் நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் புனேவில், பாம்பே நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச்சில் வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்துவந்த, ஷண்முக் தேஷ்முக் என்பவர், சொமாட்டோ செயலி வாயிலாக பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு சிக்கன் பட்டர் மசாலா விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுமுறை ஆர்டர் செய்தபோதும் நிகழ்ந்துள்ளது. இரு உணவு பதார்த்தங்களும் ஒரே ருசியில் இருந்ததால், முதல் முறை வித்தியாசத்தை உணரவில்லை என்று கூறிய அந்த வழக்கறிஞர், இரண்டாவது முறையும் இதேபோல் நிகழவே, சொமாட்டோவிடம் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இது தங்கள் தவறல்ல, உணவகத்தின் தவறு என்று சொமாட்டோ புகார் கூறவே, புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது தங்கள் தவறை அந்த உணவகம் ஒப்புக் கொள்ளவே, சொமாட்டோவுக்கும், அந்த உணவகத்திற்கும் நீதிமன்றம், 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்தப் பணத்தை, 45 நாட்களுக்குள் ஷண்முக் தேஷ்முக்கிற்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

ONLINE ORDER, PUNE, LAWYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்