“கொல்கத்தா ரசகுல்லாவா”.. “ஹைதராபாத் பிரியாணியா” - இனி State விட்டு State ஆர்டர் பண்லாம் - வேற லெவல் உணவு டெலிவரி.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் பல ஊர்களுக்கு சென்று பல சிறப்பு பெற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பலருக்கும் ஆசைகள் இருக்கும்.

Advertising
>
Advertising

Also Read | "என்ன களிமண் மாதிரி இருக்கு".. ஏர்போர்ட் குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பொருள்.. உருக்கி பார்த்தப்போ தான் விஷயமே தெரியவந்திருக்கு..!

ஆனால் இப்போது சென்னையில் இருந்துகொண்டே ஒருவர் ராஜஸ்தான் தாளியையோ, கொல்கத்தா ரசகுல்லாவையோ, ஹைதராபாத் பிரியாணியையோ எங்கும் டிராவல் பண்ணாமலேயே உண்டு சுவைக்க முடியும் என நம்ப முடிகிறதா? என்றால் அந்த கனவை சாத்தியப்படுத்தும் திட்டத்தை முன்வைத்துள்ளது Zomato நிறுவனம். ஆம், இது Zomato தொடங்கியுள்ள ஒரு முன்னோட்டத் திட்டம் தான். எனினும் இதன் கீழ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் தங்களுக்கு விருப்பமான குறிப்பிட்ட இந்திய நகர உணவகத்தின் பிடித்தமான உணவை தத்தம் வீடுகளில் இருந்தபடி ஆன்லைனில் ஆர்டர் செய்து டெலிவரி பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு 'இன்டர்சிட்டி லெஜண்ட்ஸ்' என்று அந்த நிறுவனம் பெயர் வைத்துள்ளது.

இதுகுறித்து Zomato இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது ட்வீட்டில், “இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் சிறப்பான உணவு என்று நீங்கள் பிரியப்படுபவற்றை, இப்போது வரையறுக்கப்பட்ட இடங்களில்லாம்.  இது இந்தியா நகரங்களில் தனித்துவமான உணவுகளை வீட்டில் இருந்தபடி ஆன்லைன் ஆர்டரில் டெலிவரி பெற உங்களை அனுமதிக்கிறது ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக 'ரசகுல்லா' (கொல்கத்தா), 'பிரியாணி' (ஹைதராபாத்), 'மைசூர் பாக்' (பெங்களூரு), 'கபாப்ஸ்' (லக்னோ), 'பட்டர் சிக்கன்' (டெல்லி), கச்சோரி' (ஜெய்ப்பூர்) ஆகிய உணவுகளை ஆர்டர் செய்யும்போது, குறிப்பிட்ட அந்த ஆர்டர் பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து டெலிவரி செய்யப்பட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான உணவு தயாரிக்கப்பட்டு, விமானப் போக்குவரத்தின்போது சேதமடையாத கொள்கலன்களில் அவை வைக்கப்படும். அவற்றின் நறுமணம், சுவை என அனைத்தும் உயர் தரத்தில் இருக்கிறதா என்பது மீண்டும் உணவு விநியோகத்திற்கு முன் ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்படும்.

வாடிக்கையாளர்களை டெலிவரி செய்யப்படும் ஆர்டரை பெற்ற பிறகு, அந்த உணவை மைக்ரோவேவனிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த சேவையானது முதற்கட்டமாக குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியின் சில பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அடுத்தடுத்த வாரங்களில் இந்தியாவின் பிற நகரங்களுக்கு இந்த சேவை விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

Also Read | "அது என்னய்யா அது ஒரு வார்த்த ட்வீட்?".. ட்விட்டரில் படையெடுக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் ட்வீட்கள்.. பின்னணி என்ன??

ZOMATO, ZOMATO INTERCITY LEGENDS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்