"ஏற்கனவே தெரியும்... ஆனா திருத்திக்க இவ்ளோ இருக்குனு தெரியல!"... “இந்தியாவிலேயே மோசமான டிஜிட்டல் பணியிடமா?”.. அதிர்ச்சி தந்த தரமதிப்பீடு ரிப்போர்ட்!.. மனம் திறந்த பிரபல உணவு டெலிவரி நிறுவன CEO!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆப்கள் மூலமாக வாடிக்கையாளர்களுடனான தொடர்பில் இயங்கும் முன்னணி டிஜிட்டல் நிறுவனமான ஸொமேட்டோ இந்தியாவிலேயே மிக மோசமான டிஜிட்டல் பணியிடமாக தர மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பிரபல டிஜிட்டல் அமைப்பான, ஃபேர்வொர்க் இந்தியா என்கிற அமைப்பு தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் பணியிடங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் ஸொமேட்டோ, ஸ்விக்கி மற்றும் ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் மிக மோசமான டிஜிட்டல் பணியிடங்களைக் கொண்டவையாக தர மதிப்பீடு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. மேற்கண்ட இந்த 3 நிறுவனங்களுமே 10 புள்ளிகளுக்கு 1 புள்ளியை மட்டுமே பெற்றுள்ளதாகவும், சீரான சம்பளம், பணிச் சூழல், ஒப்பந்த முறைமைகள் மற்றும் நிர்வாகப் பணிகள் உள்ளிட்டவற்றை வைத்து இந்தப் புள்ளிகள் கணக்கிடப்பட்டுள்ளன.

இதுபற்றி பேசிய, ஸொமேட்டோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல், “ஃபேர்வொர்க் இந்தியா மதிப்பீட்டில் ஸொமேட்டோ கடைசி இடத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே எங்களுக்கு இன்னும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன என்பது தெரியும், ஆனால் திருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்களாக இவ்வளவு இருப்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.  இத்தனை குறைவான புள்ளிகளை ஸொமேட்டோ பெற்றதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பேற்கிறோம். அடுத்த வருடம் இந்த மதிப்பீட்டில் சிறந்த இடத்தை பெற முயற்சிப்போம்” என்று  ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அர்பன் நிறுவனத்துக்கு இப்பட்டியலில் முதலிடமும், ஈகார்ட் நிறுவனத்துக்கு 2வது இடமும் கிடைத்திருக்கிறது. அமேசான், பிக் பேஸ்கெட், ஹவுஸ் ஜாய், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்