'மக்களே பெரிய நன்றி'... 'இனிமேல் 'உபர் ஈட்ஸ்'யில் ஆர்டர் பண்ண முடியாது'... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியா2017ம் ஆண்டு இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்கிய உபர் ஈட்ஸ், தனது சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சொமட்டோ நிறுவனம் உபர் ஈட்ஸ்யை வங்கியுள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதில் சொமட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த உபர் ஈட்ஸ், இந்த இரண்டு நிறுவங்களின் போட்டியினை சமாளிக்க முடியவில்லை. இதனால் வணிக ரீதியில் அதன் செலவை குறைக்க பல வழிகளில் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் இறங்கியது.
இந்நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் உபர் ஈட்ஸ் ஈடுபட்டதால், அந்த நிறுவனத்தால் சரியான சேவையைவழங்க முடியவில்லை. இதனால் நிறுவனத்தை விற்கும் முடிவிற்கு உபர் ஈட்ஸ் வந்தது. இதையடுத்து சொமட்டோ நிறுவனம் உபர் ஈட்ஸ்யை தற்போது வாங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது உபர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு உள்ள 9.99 % பயனாளர்கள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை உபர் ஈட்ஸ் நிறுவனம் சொமட்டோவிற்கு மாற்ற உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யாரெல்லாம் இத பண்ணி இருக்கீங்க'...'சொமேட்டோ கேட்ட கேள்வி'...பிரித்து மேய்ந்த நமது 'புள்ளிங்கோ'!
- ‘பீட்சா’ ஆர்டர் செய்த ‘ஐடி ஊழியர்’.. சேர்த்து வைத்திருந்த ‘மொத்த பணத்தையும்’ இழந்த சோகம்..
- ‘சொமாட்டோ’க்கு ரூ.1 லட்சம் அபராதம்..! சென்னை மாநகராட்சி அதிரடி..! காரணம் என்ன..?
- 3500 கோடி..ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'போட்டியாக'.. எக்கச்சக்க 'ஆபர்களுடன்' களமிறங்கும்.. 'பிரபல' நிறுவனம்!
- இந்தாங்க 'உங்க' சாப்பாடு.. ஆர்டரைக் கொடுத்துவிட்டு.. 'நாயை' கடத்தி சென்ற ஊழியர்!
- ‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..
- ‘ஒட்டுமொத்தமா போச்சு’... ‘ஜொமேட்டோ வாடிக்கையாளருக்கு நேர்ந்த சோகம்’
- அவர 'காண்டம்' பயன்படுத்த சொல்லுங்க.. 'சொமாட்டோ'வுக்கு செம அட்வைஸ் கொடுத்த நபர்!
- ‘ஒரே நாளில் இவ்ளோ ஊழியர்களா?’... ‘ஜொமோட்டோ நிறுவனத்தின் அதிரடி முடிவு’... காரணம் இதுதான்!
- ‘இதை எல்லாம் ஃபர்ஸ்ட் ஸ்டாப் பண்ணுங்க’.. ‘ஜொமேட்டோ, ஸ்விகி நிறுவனங்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்’..