'எவ்வளவு கெட்ட கெட்ட வார்த்த'... 'நடுரோட்டுல முகம் சுளிக்க வச்ச 'டெலிவரி கேர்ள்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலையில் காவல்துறையினரை தகாத வார்த்தையால் திட்டி பலரையும் முகம் சுளிக்க வைத்த, உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோ ஒன்று காண்போரை மிகவும் முகம் சுளிக்க வைத்தது. அந்த வீடியோவில் இருக்கும் உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியர் போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தையால் திட்டுவது பதிவாகியிருந்தது. இதற்கு பலரும் கண்டங்கள் தெரிவித்து வந்தார்கள்.

வீடியோவில் காவல்துறையினரை திட்டும் பிரியங்கா மோரே என்ற 27 வயது பெண் சொமட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். இவர் கடந்த 8-ந்தேதி நவிமும்பை வாஷி செக்டார்-8 பகுதியில் நோ-பார்க்கிங்கில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து உள்ளார். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர், நோ-பார்க்கிங்கில் இருந்த அவரது வாகனத்திற்கு இ-செல்லான் மூலம் அபராதம் விதிக்கும் விதமாக, அவரது வாகனத்தை செல்போனில் படம் பிடித்து உள்ளனர்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த பிரியங்கா மோரே, காவல்துறையினரை மிகவும் ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் காவல்துறை வாகனத்தை துரத்தி சென்று திட்டியதோடு போலீசாரின் செல்போனையும் பறிக்க முயற்சி செய்துள்ளார். பிரியங்கா செய்த செயலை வீடியோ எடுத்த சிலர் அதனை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார்கள். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன.

இதனிடையே அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில ஆபாசமாக திட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணை தற்போது கைது செய்துள்ளார்கள்.

MUMBAI, ZOMATO, ABUSING, ARRESTED, COPS, MUMBAI POLICE, VASHI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்