'Zomato டெலிவரி பாய்கிட்ட நான் கேட்ட ஒரே கேள்வி'... 'என்ன நெனச்சானோ தெரியல, என் மூக்கை உடைச்சிட்டான்'... மாடல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உணவு டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாகப் பெண் ஒருவர் இன்ஸ்டாவில் வழியும் ரத்தத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'Zomato டெலிவரி பாய்கிட்ட நான் கேட்ட ஒரே கேள்வி'... 'என்ன நெனச்சானோ தெரியல, என் மூக்கை உடைச்சிட்டான்'... மாடல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஹிட்டேஷா சந்திரனே. இவர் அழகுக் கலை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மார்ச் 9ம் தேதி சொமாட்டாவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் உணவு வருவதற்குத் தாமதமானதாகத் தெரிகிறது. இதனால் ஆர்டரை ரத்து செய்யுமாறு சொமாட்டோ கஸ்டமர் கேரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

Zomato delivery boy arrested for assaulting Bengaluru female customer

அந்த நேரத்தில் காமராஜ் என்ற உணவு டெலிவரி பையன் வீட்டு வாசலுக்கு வந்துள்ளார். அப்போது காமராஜுக்கும், ஹிட்டேஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே ஹிட்டேஷா உணவு தாமதம் ஆனதால் அதை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். மேலும் ஏன் இவ்வளவு தாமதமாக டெலிவரி செய்கிறாய் என ஹிட்டேஷா கேட்டுள்ளார்.

உடனே அவரை பார்த்து அந்த டெலிவரி  பாய் கத்தியுள்ளார். பின்னர் ஹிட்டேஷாவின் வீட்டிற்குள் அவர் நுழைய முயன்றதாகக் கூறியுள்ள ஹிட்டேஷா, ''என்னுடைய பாதுகாப்பிற்காகச் செருப்பைக் கையில் எடுத்ததாக'' கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் சொமாட்டா டெலிவரி பாய், எனது மூக்கை உடைத்ததாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஹிட்டேஷா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய இது குறித்துத் தெரிவித்த சொமாட்டோ டெலிவரி பாய் காமராஜ், ''ஹிட்டேஷா என்னைச் செருப்பால் தாக்க முயன்றார். நான் தற்காப்புக்காகத் தடுத்தேன். அவர் கதவில் மோதி காயமடைந்தார்'' எனத் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள சொமாட்டோ இது குறித்து போலீசார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போல எதிர்காலத்தில் நடக்காது எனவும் உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே இன்ஸ்டாகிராமில் ஹிட்டேஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்