வீடு வீடா போய் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனத்தின் 'CEO'.. "மூணு வருசமா Follow பண்றாராம்"!!.. சிலிர்க்க வைத்த பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் என்பது மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக இருந்து வரும் விஷயமாகும்.

Advertising
>
Advertising

Also Read | ஒரே லைனில் தோனி சொன்ன விஷயம்.. வேற லெவல் உற்சாகத்தில் CSK ரசிகர்கள்!!..

நேரடியாக உணவகங்களுக்கு சென்று உணவருந்தியோ அல்லது வாங்கியோ வருவதை விட, ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம், வீட்டில் இருந்து கொண்டே ஆர்டர் செய்யும் போது நமக்கு தேவையான உணவை விலைக்கேற்ப நிதானமாக பார்த்துக் கூட ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இதன் காரணமாக, நகர பகுதிகளில் ஆன்லைன் டெலிவரி செய்யும் ஊழியர்களை பெரும்பாலான சாலைகளில் நாம் பார்க்க முடியும்.

இதனிடையே, பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவின் சிஇஓ பற்றி தற்போது வெளியாகி உள்ள தகவல் ஒன்று, இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. வேலை வாய்ப்புக்கான பிரபல Naukri.com நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக துணை தலைவரான சஞ்சீவ் பிக்சந்தனி, சொமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ திபேந்தர் கோயல் குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அவரது பதிவில், "சொமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ திபேந்தர் கோயல் மற்றும் சொமாட்டோ நிறுவன குழுவினரை சமீபத்தில் சந்தித்தேன். அப்போது திபேந்தர் உள்ளிட்ட சொமாட்டோ நிறுவனத்தின் அனைத்து மூத்த அதிகாரிகளும், zomato வின் சிகப்பு நிற சீருடை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு அவர்களாகவே பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்வது குறித்து அறிந்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை என கடந்த மூன்று ஆண்டுகளாக இதை திபேந்தர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பின்பற்றி வருகிறார்கள். மேலும் இதுவரை தங்களை யாரும் அடையாளம் கண்டதே இல்லை என்றும் திபேந்தர் என்னிடம் கூறினார்" என சஞ்சீவ் குறிப்பிட்டிருந்தார்.

பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தின் சிஇஓ, வாடிக்கையாளர்களுக்காக பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்து வருவது குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியது. அதிகாரிகளாக மட்டும் இல்லாமல், களத்தில் இறங்கி ஊழியர்களை போலவும் செயல்பட்டு வரும்  சொமாட்டோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே தீபேந்தர் கோயிலின் ட்விட்டர் பயோவிலும் சொமாட்டோ சிஇஓ என்று இல்லாமல் டெலிவரி பாய் என குறிப்பிட்டிருப்பதும் தற்போது நெட்டிசன்கள் கவனத்தை பெற்று வருகிறது.

Also Read | கேட்ச் பிடிக்க வந்த பவுலரை தடுத்த மேத்யூ வேட்..?.. கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை - வீடியோ!!

ZOMATO, ZOMATO CEO, ZOMATO CEO DELIVERS FOOD, COMPANY T SHIRT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்