டெலிவரி பாயாக மாறிய பிரபல நிறுவனத்தின் CEO.. களத்தில் இறங்கிய அசத்தல் காரணம்.. அதுலயும் ஒரு ஸ்பெஷல் டெலிவரி இருக்கே!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2023 ஆம் ஆண்டு தற்போது தொடங்கி உள்ள நிலையில், உலக மக்கள் அனைவரும் அதனை சிறப்பாக வரவேற்று பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் இயங்கி வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | தந்தை இறந்த நேரத்தில்.. பிரதமர் மோடி செஞ்சது என்ன?.. நினைவுகூர்ந்த VHP தலைவர்!!

கடந்த ஆண்டுகளில் கைகூடாத பல்வேறு கனவுகளை இந்த 2023 ஆம் ஆண்டில் எட்டிப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் ஏராளமானோர் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கு மத்தியில், பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோவின் சிஇஓ புத்தாண்டு தினத்தில் செய்த விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் பழக்கம் ஏராளமான மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. வேலை என்று இருக்கும் பலரும் நேரடியாக உணவகங்கள் செய்ய நேரம் இல்லாத சமயத்தில் இப்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உணவுகளை பெற்றுக் கொள்கின்றனர்.

இதன் காரணமாக பல உணவு டெலிவரி நிறுவனங்களும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. அதில் ஒன்று தான் சோமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம். இதனிடையே புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று புத்தாண்டு ஈவினிங் என்ற சூழலில் ஏராளமானோர் சோமாட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதிக ஆடர்கள் காரணமாக சோமாட்டோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தீபிந்தர் கோயலும் புத்தாண்டு ஸ்பெஷலாக உணவு டெலிவரி செய்யும் ஊழியராக மாறி பணியாற்றி உள்ளதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தான் உணவு டெலிவரி செய்ய போனதன் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார். 4 ஆர்டர்களை அவர் டெலிவரி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதிலும் ஒரு ஆர்டர் என்பது வயதான தம்பதியர், தங்களின் பேரக் குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடியவர்களுக்காக டெலிவரி செய்ததையும் தீபிந்தர் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெரிய நிறுவனத்தின் சிஇஓ உணவு டெலிவரி செய்தது தொடர்பான ட்விட்டர் பதிவு பெரிய அளவில் இணையத்தை கலக்கி வரும் நிலையில், பலரும் பலவிதமான கருத்துகளையும் குறிப்பிட்டு தீபிந்தர் கோயலின் அர்ப்பணிப்பையும் பெரிய அளவில் பாராட்டி வருகின்றனர்.

Also Read | கடன் வாங்கி கனடாவுக்கு படிக்க போன இந்திய மாணவர்.. இரண்டே நாளில் நடந்த துயரம்..

ZOMATO CEO, ZOMATO CEO DEEPINDER GOYAL, DELIVERS FOOD, ONLINE FOOD, NEW YEAR 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்