'கண்ணுங்களா இப்படி செஞ்சா என்ன அர்த்தம்'... 'ட்விட்டரில் சொமாட்டோ கேட்ட கேள்வி'... நெட்டிசன்களின் அல்டிமேட் பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பலரின் வாழ்க்கைச் சூழல் அடியோடு மாறியுள்ளது. அதிலும் ஐடி ஊழியர்கள் உட்படப் பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் அவர்கள் இரவு தூங்கச் செல்லும் நேரமும் அடியோடு மாறியுள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்து சொமாட்டோ நிறுவனம் ட்விட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது.

Advertising
Advertising

அதில் ''வாடிக்கையாளர்கள் தங்களது முதல் உணவை மதியம் 2 மணிக்கு ஆர்டர் செய்தால், அது காலை உணவா அல்லது மதியம் உணவா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் பலர் காலை உணவை மதியம் 2 அளவில் ஆர்டர் செய்வதைச் சுட்டிக்காட்டியே இந்த கேள்வியினை சொமாட்டோ நிறுவனம் எழுப்பியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் சளைக்காமல் பதிலளித்து வருகிறார்கள்.

சிலர், இவ்வாறு ஆர்டர் செய்து சாப்பிடுவதை பிரேக்கின்ச் (Breaknch) என்று அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். சிலர் இதெல்லாம் ஒரு கேள்வியா, குழந்தைத்தனமாக இருக்கிறது எனவும் பதிலளித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்