'யாரெல்லாம் இத பண்ணி இருக்கீங்க'...'சொமேட்டோ கேட்ட கேள்வி'...பிரித்து மேய்ந்த நமது 'புள்ளிங்கோ'!
முகப்பு > செய்திகள் > இந்தியாட்விட்டரில் சொமேட்டோ கேட்ட ஒற்றை கேள்வி தான் தற்போது செம ட்ரெண்டிங். இலவசமாக உணவு சாப்பிட வேடிக்கையாக நீங்கள் செய்த விஷயம் என்ன என்பது தான் அந்த கேள்வி.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழ்வது சொமேட்டோ. வாடிக்கையாளர்களிடம் மிகவும் பிரபலமான சொமேட்டோ, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம். தற்போது தனது வாடிக்கையாளிடம் நகைச்சுவையான கேள்வி ஒன்றை ட்விட்டரில் சொமேட்டோ எழுப்பியுள்ளது. அதில், ‘இலவசமாக உணவு பெற நீங்கள் வேடிக்கையாக செய்த விஷயம் என்ன?’. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது பதில்களை தெரிவித்துளார்கள்.
அதில், எனது நண்பர்களை ட்ரீட் வையுங்கள் என கூட்டி சென்று மூக்கு முட்ட சாப்பிட்டு இருக்கிறேன், அழைப்பிதழ் இல்லாத திருமணத்திற்கு சென்று நன்றாக சாப்பிட்டு இருக்கிறேன், உணவு தகவல் கொடுப்பவராக, யூடியூஃப் சேனல் நடத்தியிருக்கிறேன், என சிலர் தெரிவித்துள்ளார்கள். அதிலும் ஒரு படி மேலே சென்ற சிலர், தங்களது முன்னாள் காதலியின் திருமணத்தில் நன்றாக ஒரு வெட்டு வெட்டியிருக்கிறேன் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் அலுவலகத்தில் இரவு 10.30 மணிக்குமேல் இருந்து பணியாற்றுவேன், அப்போது வேறு வழி இல்லாமல் எனது ஹெச்.ஆர் உணவு ஆர்டர் செய்வார் அல்டிமேட் பதிலை அளித்துள்ளார். இதற்கு எல்லாம் ஒரு படி மேலே, நெட்டிசன் ஒருவர் அளித்த பதில் தான் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
அதில், ''எங்கள் பகுதியில் இருக்கும் ரயில்வே கிராஸிங் எப்போது அடைப்பார்கள். எப்போது ரயில் வரும் என எனக்கு தெரியும். சரியாக அந்த சமயத்தில் பீட்சாஆர்டர் செய்வேன். அப்போது டெலிவரி செய்பவரால் சரியான நேரத்திற்கு டெலிவரி செய்யமுடியாமல் போகும். அதனால் அவர் எனக்கு பீட்சாவை இலவசமாக வழங்குவார்'' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஐயோ என் குழந்தைக்கு பசிக்கும்'...'பிரேக்கில் ஓடோடி வந்த வீராங்கனை'...நெகிழவைக்கும் புகைப்படம்!
- ஆற்றுக்கு நடுவில் 'டிக்டாக்'.. சடாரென 'உடைந்த' பாலம்.. என்ன ஆச்சுன்னு 'நீங்களே' பாருங்க!
- இந்த ஆட்டம் போதுமா?... சமூக வலைதளங்களில்.. 'தீயாய்' பரவும் வீடியோ.. நெட்டிசன்கள் கிண்டல்!
- நீங்க தான் எப்போதுமே ‘என்னோட கேப்டன்’.. ‘ட்விட்டரைக் கலக்கிய’ கோலியின் ‘வாழ்த்து ட்வீட்’..
- 'அவங்கள' கூட்டிப்போங்க.. எப்படியும் 'ஓட' பாப்பாங்க..முதல்வர் மகனுக்கு 'ஐடியா' .. அதேபோல 'நடந்த' என்கவுண்டர்!
- ‘பீட்சா’ ஆர்டர் செய்த ‘ஐடி ஊழியர்’.. சேர்த்து வைத்திருந்த ‘மொத்த பணத்தையும்’ இழந்த சோகம்..
- 'மரணதண்டனை' உறுதி.. நேற்றிரவே என்கவுண்டர் குறித்து.. 'க்ளூ' கொடுத்த போலீஸ்!
- 'இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி!'.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!
- Video: அப்பா.. 'லவ்' பெயிலியர் ஆயிடுச்சுப்பா.. உன் மூஞ்சை 'கண்ணாடில' பாரு.. தரமான சம்பவம்!
- எஸ்ஐ-யா இருந்தா.. வேற மாதிரி 'கணக்கு' பண்ணிருப்பாரு.. 'வைரல்' வீடியோ!