“கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க!”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மினி வேனில் கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று மாலை அங்கு சென்ற போலீசார் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கூறிய பதில் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவர்களை சோதித்ததில் அவர்களின் சட்டைப்பையில் கஞ்சா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தங்களது பாணியில் விசாரித்தனர். அந்த விசாரணையில் முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த அன்பு என்கிற அன்பரசன் , முருங்கப்பாக்கம் குமாரவேலு நகரைச் சேர்ந்த சிவகாஷ் என்பவர்தான் அந்த இளைஞர்கள் என்றும் இவர்கள் நைனார்மண்டபத்தை சேர்ந்த கீர்த்திவாசன், விஜி, ஓட்டுநர் ஜான் பாஷா உள்ளிட்டோவருடன் சேர்ந்து மினி வேனில் கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சாவை கடத்தி வந்து 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அன்பரசன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 150 கிராம் அளவு கொண்ட 52 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமல்லாமல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன், இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்