“குளியல் அறைக்கு போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!” .. 'கொரோனா' சிகிச்சை மையத்தில் நடந்த 'பரபரப்பு' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தொடக்கத்தில் கேரளாவில் கொரோனா உயர்ந்து மீண்டும் கட்டுக்குள் வந்து, மீண்டும் தற்போது கொரோனாவின் தாக்கம் கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலுள்ள பல்வேறு கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா பார்மசி கல்லூரியில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையத்தில், கேரளா மாநிலம் செங்கல் பகுதியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் 25 வயதான ஷாலு கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதே சிகிச்சை மையத்தில் அதே பகுதியில் உள்ள 20 வயது இளம் பெண் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அப்படி அவர் அங்குள்ள குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

பின்னர் அந்த செல்போனை பார்த்தபோது, அதில் அப்பெண் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்ததை அடுத்து, அதனை சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து அந்த பெண் புகார் அளித்தார். இதனால் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார்  அந்த செல்போனை ஆய்வு செய்தபோது அது அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஷாலுவின் செல்போன் என தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, அவர்தான் செல்போனை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்ததாக  ஒப்புக்கொண்டார். பிறகு போலீஸார் அவரை கைது செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்