காதலி பெயரில் 'டீக்கடை'.. Committed -ஆ இருந்தா 10 ரூபா, Single -னா 5 ரூபா.. மனுஷன் வெற்றிக்கு பின்னாடி இப்டி ஒரு சோக கதையா?..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது காதலி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து கொண்டு, காதலையும் முறித்து கொண்டு சென்ற நிலையில், இளைஞர் அடுத்து செய்த விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | அர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அரேபியா... மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவூதி அரசர் சல்மான்..!

காதலில் தோல்வி ஏற்படுவது குறித்து நாம் நிறைய நிகழ்வுகளை கேள்விப்பட்டிருப்போம். தாம் உயிருக்கு உயிராக காதலித்து வாழ்க்கையை இவர் கூட தான் வாழ போகிறோம் என ஒருவர் கனவு காணும் சூழலில், ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த உறவில் விரிசல் ஏற்பட்டு பிரியும் நிலையும் உருவாகும்.

இதன் காரணமாக ஒருவர் மனமுடையும் பட்சத்தில் அதிலிருந்து மெல்ல மெல்ல வெளியேறி தங்களின் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவும் பலரும் முயற்சி செய்வார்கள். இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலி பிரிந்து சென்ற பிறகு செய்த விஷயம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அந்தர் குஜ்ஜர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்வில் சந்தித்த பெண்ணிடம் நட்பாக பழகி வந்த அந்தர் குஜ்ஜர், நாளடைவில் அவரை காதலிக்கவும் தொடங்கியதாக தெரிகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளவும் அவர்கள் திட்டம் போட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் நிச்சயம் ஆனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்தர் குஜ்ஜர் வேலை இல்லாமல் இருந்ததால் அவரை காதலி பிரிந்து சென்றதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த அந்தர் குஜ்ஜார், விபரீத முடிவை எடுக்கவும் முயன்றுள்ளார். ஆனால் அவரது நண்பர்கள் அதிலிருந்து மெல்ல மெல்ல அவரை தேற்ற மீண்டு வதுள்ளார் குஜ்ஜர். எந்த காரணத்திற்காக காதலி தன்னை விட்டு போனாரோ அதே காரணத்தை கையில் எடுத்த அந்தர் குஜ்ஜர், சொந்தமாக டீக்கடை ஒன்றை தொடங்கி உள்ளார்.

மேலும் அந்த கடைக்கு தனது காதலியின் பெயரில் உள்ள முதல் எழுத்தான 'M' ஐ வைத்துள்ள அந்தர் குஜ்ஜர், "M Bewafa Chai Wala" என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் Bewafa என்ற வார்த்தைக்கு நம்பத்தன்மை இல்லாதவர் என்று பொருள்.

தனது கடையின் பெயரில் மட்டும் வித்தியாசம் காட்டாத அந்தர் குஜ்ஜர், டீயின் விலையிலும் சில வேறுபாடுகள் வைத்து கவனம் ஈர்த்துள்ளார். ஜோடியாக இருப்பவர்கள் அல்லது வரும் நபர்களுக்கு ஒரு டீயை 10 ரூபாய்க்கு விற்கும் அந்தர் குஜ்ஜர், சிங்கிளாக அல்லது காதலில் தோல்வி அடைந்து மனமுடைந்த நபர்களுக்கு ஒரு டீயை 5 ரூபாய்க்கு விற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடை ஒன்றை திறக்கும் போது தனது பெயரை வைக்க வேண்டும் என காதலி கூறி இருந்ததை நினைவு கூர்ந்து M என குறிப்பிட்டு கூடவே காதலிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெயர் வைத்ததாகவும் அந்தர் குஜ்ஜர் தெரிவித்துள்ளார்.

Also Read | அந்த மனசு தான் சார்.. மேட்ச் முடிஞ்ச அப்பறம் ஜப்பான் ரசிகர்கள் செஞ்ச காரியம்.. நெகிழ்ந்துபோன அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!

MADHYA PRADESH, YOUTH, TEA SHOP, LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்