'அண்ணன், அண்ணிக்கு கொழந்த பொறந்தாச்சு.. கொஞ்ச நாள்ல'.. 'உயிரோடு எரித்து ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் மாநிலத்தின் மன்சா மாவட்டத்தில் சூரத் சிங் எனும் 55 வயதான நபருக்கு 2 மகன்கள். மூத்த மகன் குல்வீந்தர் சிங், சில வருடங்களாகவே பக்கத்து வீட்டில் இருந்த ஜஷான் ப்ரீத் என்பவரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவீட்டாரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு வேறொரு ஊரில் இருந்து வந்துள்ளனர்.
இப்படி வருடம் போக, தம்பதியர்க்கு குழந்தை பிறந்தது. அப்போதுதான் தன் அண்ணன் குல்வீந்தர் சிங்கிற்கு பிறந்த குழந்தையைக் காண வந்த ஜஸ்ப்ரீத் சிங், அண்ணனையும் அண்ணியையும் குழந்தையையும் விரைவில் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்துள்ளார்.
மீண்டும் தன் ஊருக்கு திரும்பிய ஜஸ்ப்ரீத் சிங், தனது அண்ணியின் அண்ணனான ஜஷான் ப்ரீத்திடம் சென்று, தனது அண்ணனுக்கும், அண்ணிக்கும் குழந்தை பிறந்ததாகவும், விரைவில் அவர்களை குழந்தையுடன் தங்களது வீட்டுக்கு அழைத்துவரவுள்ளதாகவும் வெகுளியாகக் கூறி, கிண்டல் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜஷான், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜஸ்ப்ரீத் சிங்கை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கிச் சென்றுள்ளார்.
அங்கு ஜஸ்ப்ரீத் சிங்கை துன்புறுத்தியதும் அல்லாமல், பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பியுள்ளார். அங்கிருந்த சிலர் ஜஸ்ப்ரீத் சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் போகும் வழியிலேயே ஜஸ்ப்ரீத் சிங் உயிரிழந்தார்.
மற்ற செய்திகள்
'மின்னல் வேகத்தில் வந்த ரயில்'...'திடீரென கைக்குழந்தையுடன் பாய்ந்த தாய்'...நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- 'தூங்கிட்டு இருந்தேன்.. மேல ஏதோ ஊத்தினா'.. 'கண் முழிச்சு பாத்தா'.. சந்தேகக் காதலி.. நெஞ்சை உலுக்கும் மரண வாக்குமூலம்!
- ‘காதல் திருமணம்’ செய்த ‘இளம்தம்பதி’.. 9 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..
- 'வயசு 23 தான்' .. 'ஆனா 8 பெண்களுடன் கல்யாணம்'!.. 9-வதாக ஏமாறிய இளம்பெண்..! மிரள வைத்த தஞ்சை வாலிபர்..!
- ‘வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்’!.. மகளை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய தாய்..! அதிர வைத்த காரணம்..!
- ‘ஆன்லைனில் காதல்’! ‘காதலியை நேரில் பார்க்க போன சாஃப்ட்வேர் இன்ஜீனியர்’.. எதிர்பாராம நடந்த பெரிய ட்விஸ்ட்..!
- 'அப்ப எதுக்கு லவ் மட்டும் பண்ண?'.. திருமணத்துக்கு மறுத்த காதலி.. ஆத்திரத்தில் காதலன் கொடுத்த கொடூர தண்டனை!
- ‘செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்’.. ‘காதலனுடன் சேர்ந்து போட்ட அதிரவைக்கும் திட்டம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..
- 'விட்ருங்க.. ப்ளீஸ்!'.. காதல் பட பாணியில் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய இளம் ஜோடி.. வீடியோ!
- ‘பெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..
- ‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..