எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா.. நடுரோட்டில் பர்த்டே கேக் வெட்டிய ரக்கடு பாய்.. ஸ்பாட்லயே போலீஸ் கொடுத்த தண்டனை.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் சிலருக்கு விநோத தண்டனை அளித்திருக்கிறார்கள் அம்மாநில காவல்துறை அதிகாரிகள். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ஓ இதுனால தான் அவரு 360 டிகிரி பிளேயரா.. ஷாட் ஒவ்வொண்ணும் பயங்கரமா இருக்கே.. ஜிம்பாப்வே கிட்ட பொங்கிய சூர்யா குமார் யாதவ்..!

தற்போதைய காலகட்டத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிக முக்கிய நாளாக மாறியுள்ளது. ஆனால், கொண்டாட்டங்கள் பிறருக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்க கூடாது என்பதை தொடர்ந்து காவல்துறையும் வலியுறுத்தி வருகிறது. அதனையும் மீறி செயல்பட்ட சில இளைஞர்களுக்கு உத்திர பிரதேச காவல்துறை விநோதமான தண்டனையை அளித்திருக்கிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் சில தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அங்கு உள்ள முக்கிய சாலை ஒன்றில் 5 இளைஞர்கள் கூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது கேக்கை அவர்கள் கீழே கொட்டியதாக தெரிகிறது. இதனால் சாலை முழுவதும் கேக் சிதறி கிடக்க, அப்போது கவுடம்பள்ளி பகுதி போலீசார் அந்த வழியாக ரோந்து சென்றிருக்கின்றனர்.

இளைஞர்களின் செயலை கண்டதும் வாகனத்தை நிறுத்திய காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்திருக்கின்றனர். தொடர்ந்து, சாலையில் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்யும்படி இளைஞர்களிடம் சொல்லியிருக்கின்றனர் காவல்துறை. இதனையடுத்து, இளைஞர்கள் கேக் மற்றும் அட்டை பெட்டிகளால் அசுத்தமாகி இருந்த இடத்தை சுத்தம் செய்தனர்.

இதனை தொடர்ந்து, இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறை அதிகாரிகள், பணத்தை சிக்கனத்துடனும் பொறுப்புடனும் செலவு செய்யவேண்டும் எனவும் பொதுஇடத்தை அசுத்தமாக்க கூடாது எனவும் கூறினர். இதனிடையே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சாலையை அசுத்தமாக்கிய இளைஞர்களுக்கு அதே இடத்தில் காவல்துறையினர் தண்டனை அளித்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக, உத்திர பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் தீபாவளி பண்டிகை அன்று ஓடும் காரின் மேற்புறத்தில் சில இளைஞர்கள் பட்டாசு கொளுத்தினர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அதே இடத்தில் இளைஞர்களை காவல்துறையினர் தோப்புக்கரணம் போட செய்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல தமிழ் எழுத்தாளர் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தமிழிலேயே போட்ட நெகிழ்ச்சியான ட்வீட்.. முழு விபரம்..!

UTTARPRADESH, POLICE, YOUTH, CELEBRATES, BIRTHDAY, ROAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்