'கொரோனா' உதவி எண்ணுக்கு 'ஃபோன்' செய்து... சூடா 'சமோசா, பீட்சா' ஆர்டர் செய்த 'இளைஞர்கள்'... 'வாழ்நாளில்' மறக்க முடியாத 'தண்டனை' அளித்த போலீசார்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா உதவி எண்ணுக்கு போன் செய்து சேவையை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் சமோசா, பீட்சா என ஆர்டர் செய்வோருக்கு போலீஸார் விநோத தண்டனை அளித்து வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் அவசர உதவிக்காக கொரோனா உதவி எண்களை அரசு அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இளைஞர்கள் சிலர் இந்த எண்களுக்கு போன் செய்து சூடாக சமோசா, பீட்சா போன்ற உணவுகளை ஆர்டர் செய்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் இவ்வாறு செய்த இளைஞர்களை தூய்மைப் பணிகளைச் செய்யச் சொல்லி போலீசார் தண்டனை அளித்துள்ளனர்.  சாலைகளைத் தூய்மை செய்தல், கழிவுநீர் வாய்க்கால்களை தூய்மை செய்தல் போன்ற பணிகள் இவர்களுக்கு தண்டனையாக வழங்கப்பட்டன.

CORONA, SAMOSA, UTTARPRADESH, HELP NUMBER, POLICE, PUNISHED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்