"இந்த காலத்து இளைஞர்கள் மனைவினாலே தொல்லைன்னு நினைக்கிறாங்க".. விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தற்கால இளைஞர்கள் மனைவி என்றாலே துன்பத்தை அழைத்துவருபவர் என கருதுவதாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | அதிமுக பொதுக்குழு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

விவாகரத்து

கேரள மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்த இந்த தம்பதி காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இருவரும் சவூதி அரேபியாவில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் இருக்கும் நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார் கணவர். தனது மனைவி தன்னை துன்புறுத்திவருவதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Credit : Tribune India

நீதிமன்றத்தில் அவரது மனைவி தான் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பப்படுவதாக தெரிவித்திருக்கிறார். மேலும், கணவரின் தாயாரும் தனது மருமகளுக்கு ஆதரவாகவே சாட்சி சொல்லியிருக்கிறார். குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் மனைவி துன்புறுத்தியதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்க தவறியதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

யூஸ் அண்ட் த்ரோ

இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் கணவர். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் அமர்வின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கணவரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும். பல கருத்துகளையும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். திருமணம் குறித்து பேசிய நீதிபதிகள்,"ஒரு பொருளை பயன்படுத்தி விட்டு பின்னர் வீசி எறியும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ பழக்கம், திருமண வாழ்க்கையிலும் வந்து விட்டது. ‘தெய்வத்தின் சொந்த நாடு’ என்று அழைக்கப்படும் கேரளாவில் ஒரு காலத்தில் திருமண பந்தம்  மிகவும் உறுதியாக இருந்தது. இப்போது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சிறிய காரணங்களுக்கு கூட விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இன்றைய  இளைஞர் சமூகம், தனது சொந்த விருப்பத்தின்படி வாழ திருமண பந்தத்தை பெரும் இடையூறாக கருதுகிறது" என்றனர்.

CREDIT: The Wire

தொல்லை

மேலும், தற்கால இளைஞர்கள் மனைவி என்றாலே துன்பத்தை கொண்டுவருபவர் என கருதுவதாகவும் எப்போது வேண்டுமானாலும் பிரிய கூடிய லிவிங் டுகெதர் உறவில் இருப்பதையே இளைஞர்கள் விரும்புவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர் நீதிபதிகள். இளைஞர்கள் லிவிங் முறையில் வாழ்வது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் எனக்குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வாழ்க்கை முறையால் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Also Read | 6 வருஷத்துக்கு முன்னாடி தொலைந்துபோன மாற்றுத் திறனாளி சிறுவன்.. ஆதார் கார்டு மூலமாக நடந்த அதிசயம்.. நெகிழ வைக்கும் சம்பவம்..!

KERALA, YOUNGSTERS, WIFE, HIGH COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்