'கொரோனா'வின் பிடியிலிருந்து மீண்டு வந்த 'இளைஞர்' ... 'கைதட்டி' உற்சாகமளித்த சக நோயாளிகள் ... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் குறிப்பாக காசர்கோடு மாவட்டத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் காசர்கோடு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளார். குணமடைந்து வீடு திரும்பிய அவரை அங்கிருந்த சக நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இரண்டு பக்கமும் நின்று கைதட்டி உற்சாகத்துடன் அந்த நபரை அனுப்பி வைத்தனர். இந்த வீடியோவை கேரள அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து குணமடைந்த நபர் ஒருவருக்கு உற்சாகமளித்த இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்