கேரளாவை தொடர்ந்து மைசூர் மலையின் 300 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்ட மாணவர்.. ஹெலிகாப்டரில் மீட்கும் பரபரப்பு காட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவின் புகழ்பெற்ற நந்தி மலை பகுதிக்கு சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் மலை பகுதியில் வழுக்கியதால் 300 அடி பள்ளத்தில் இருந்த பாறையில் சிக்கிக் கொண்டார். இதனை அடுத்து ஹெலிகாப்டர் மூலமாக அவரை மீட்புப்படை  வீரர்கள் மீட்ட காட்சி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertising
>
Advertising

300 ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!

நந்தி மலை

பெங்களூரு அருகே 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்கும் நந்தி மலை என்று அழைக்கப்படும் பிரம்மகிரி குன்று. வார இறுதி நாட்களில் மலையேற்றம் செல்லவும், மலை மீது உள்ள சொகுசு விடுதிகளில் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கவும் ஏராளமானோர் இங்கே படையெடுக்கின்றனர்.

தனியாக மலையேறிய மாணவர்

டெல்லியைச் சேர்ந்த நிஷாங்க் கவுல் என்னும் இளைஞர் பெங்களூருவில் தங்கி கல்வி பயின்று வருகிறார்.  18 வயதாகும் நிஷாங்க் PES பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வருகின்றார். இந்நிலையில், மலையேற்றத்திற்காக நந்திமலைக்கு அவர் தனியாக சென்றுள்ளார்.

300 அடி உயரமுள்ள செங்குத்தான மலை பாதையில் கயிற்றை கொண்டு மலையேறிய நிஷாங்க், எதிர்பாராத விதமாக தவறி 200 அடி உயரத்தில் உள்ள பாறையில் விழுந்துள்ளார். இதனால் அவரது மூக்கில் காயம் பட்டிருக்கிறது. செல்போன் மூலம் போலீசாரை தொடர்புகொண்ட நிஷாங்க் தனது நிலைமையை எடுத்துரைத்து தான் இருக்கும் இடத்தையும் தெரிவித்திருக்கிறார்.

டிவிட்டரில் உதவி

இதனிடையே,  நந்தி மலையில் சிக்கிக்கொண்ட தனது சகோதரர் நிஷாங்கை மீட்க உதவுமாறு அவரது சகோதரி சிம்ரன் கவுல் தேசிய பேரிடர் மீட்பு படை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை டேக் செய்திருந்தார்.

விமானப் படை

இது குறித்து தகவல் அறிந்த சிக்பல்லப்பூர் மாவட்ட ஆட்சியர், மீட்பு நடவடிக்கை தொடர்பாக யெலஹங்கா பகுதி விமானப்படையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து விமானப்படை  ஹெலிகாப்டர் மூலம் அந்த மாணவரை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிக்கபள்ளாபூர் பகுதி போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பாறை இடுக்கில் அசைய முடியாமல் சிக்கியிருந்த நிஷாங்கை கண்டு பிடித்த விமான படையினர் அவரை பத்திரமாக மீட்டனர். விமானப்படைய சேரந்த மருத்துவ உதவியாளர் அந்த மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக, கேரளாவில் இளைஞர் ஒருவர் இதேபோன்று மலையில் சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவரை ராணுவம் மீட்டது பரபரப்பாக பேசப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா மலைப்பகுதிக்கு டிரெக்கிங் சென்ற போது தவறி விழுந்து மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் பாபு என்பவரை 40 மணி நேர போராட்டத்திற்கு பின் ராணுவ வீரர்கள் தங்களது உயிரை பணயம்  வைத்து மீட்டனர்.

தற்போது அதேபோல, நந்தி மலையில் சிக்கிய மாணவரை விமான படை மீட்டிருப்பது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஓட்டுக்கு கொடுத்த தங்க நாணயம்.. அடகுக் கடையில் தெரிய வந்த உண்மை.. வேட்பாளரின் கணவர் கூறிய தகவல்

YOUNG TREKKER, STUCK, BRAMHAGIRI ROCK, AIR FORCE, கர்நாடகா, மாணவர், நந்தி மலை, விமானப் படை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்