“அக்கா கல்யாணம் முடியுற வரைக்கும் வெயிட் பண்ணுப்பா!”.. இளம் என்ஜினியர் எடுத்த சோக முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணம் செய்துவைக்க பெற்றோர் தாமதித்துக் கொண்டே இருந்ததாகக் கூறி 24 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்தவர் 24 வயதான நிகில் கவுட் என்பவர். இவருடைய அக்காவுக்கு திருமணம் ஆகி 10 நாட்களே ஆகின்றன. ஆனால் தனது அக்காவுக்கு திருமணம் ஆவதற்கு முன்பில் இருந்தே, சுமார் 1 வருடத்துக்கும் மேலாக, நிகில் கவுடா தனக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வையுங்கள் என்று பெற்றோரிடம் கேட்டுக்கொண்டிருந்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் அவரது பெற்றோரோ, அவருக்கு வயது குறைவாக இருப்பதாகக் கூறி, அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்காமல் தாமதித்துக் கொண்டே இருந்ததாகவும், அக்காவின் திருமணம் நடக்கும் வரை காத்திருக்குமாறும் கூறியதாகவும் தெரிகிறது.  எனினும் சகோதரியின் திருமணம் முடிந்த கையோடு நிகிலின் பெற்றோர் வெளியில் சென்றுவிட்டு, கடந்த செவ்வாய் கிழமை இரவு 8.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது நிகில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அவரது பெற்றோர் மனமுடைந்து போயுள்ளனர். இதுபற்றி உப்பல் காவல் நிலைய போலீஸாரிடத்தில் தகவல் தெரிவித்த நிகிலின் தந்தை ராம் மோகன் கவுட், தனது மகன் திருமணம் செய்துவைக்கக் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும், ஆனால் அதற்கு தாமதமானதால் மனம் நொந்து போய் தற்கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியை அதிரவைத்துள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

MARRIAGE, WEDDING, YOUTH, YOUNGSTER, HYDERABAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்