டேட்டிங் ஆப்பில் உருகி உருகி காதல்.. நேரில் சென்றால் அது பொண்ணே இல்ல.. இளைஞரின் விபரீத ஆசை

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டின்டர் செயலி மூலமாக பெண்போல பழகி மர்மகும்பல் இளைஞரை வசமாக ஏமாற்றி பணத்தை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertising
>
Advertising

இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மக்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே   பல்வேறு விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது. இதனால், சில விபரீதமான பிரச்னைகளில் சிக்குவதும் உண்டு. இளைஞர்களிடையே எப்படி இதில் சிக்கினார்கள் என்றே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு டேட்டிங் ஆப்பின் மோகம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இளைஞர் ஒருவர் டிண்டர் ஆப்பில் பெண்ணிடம் பேசி சிக்கி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

28 வயது இளைஞர்

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் வரும் 28 வயதான இளைஞருக்கு டேட்டிங் செயலியான டின்டர் மூலமாக பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு நெருக்கமாகியுள்ளது. இதையடுத்து, அந்த பெண் 28 வயதான அந்த இளைஞரைச் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, தனது தோழியை பார்க்க அந்த இளைஞர் கஞ்சிவாட பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு, அப்பெண் அவரை காசர் - இ- கவாஜா குடியிருப்புக்கு அழைத்துள்ளார்.  ஆர்வத்துடன் தனது தோழியை பார்க்க சென்ற அந்த இளைஞருக்கு இப்படியொரு அதிர்ச்சி நிகழ்வு எதிர்பார்க்காத ஒன்றாக நிகழ்ந்தது.

காதலியை பார்க்க சென்ற இளைஞன்

இத்தனை நாட்களாக அவருடன் பெண் போல பேசி பழகி வந்தது ஒரு ஆண் என்பது தெரிந்ததும் அந்த இளைஞர் ஏமாற்றம் அடைந்தார்.
பின்பு,  அந்த இளைஞரை ஏமாற்றி பழகி வந்த ஆணுடன் மூன்று நபர்கள் அங்கே இருந்தனர். அவர்கள் கதவை அடைத்து இந்த இளைஞரை வெளியே செல்லவிடாமல் தடுத்ததுடன், அவர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கட்டையால் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனத்தொடர்ந்து, அந்த இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி, தங்களது வங்கிக்கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யுமாறும் மிரட்டியுள்ளது.
இதனால், பயந்து போன அந்த இளைஞர் கூகுள் பே மூலமாக 31 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். மேலும், அந்த இளைஞரை மிரட்டி அவரது ஏ.டி.எம். கார்டை பறித்த அந்த கும்பல் அதில் இருந்தும் ரூபாய் 24 ஆயிரத்தை எடுத்துள்ளது.

காத்திருந்த அதிர்ச்சி

  ரூபாய் 55 ஆயிரத்தை பறித்த அந்த கும்பல், அந்த இளைஞரை அங்கிருந்து விரட்டி அனுப்பியுள்ளது. பின்னர், தப்பி வந்த அந்த இளைஞர் தனது நண்பருடன் சென்று காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில்,  கஞ்சிபட் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த நான்கு இளைஞர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். சந்தேகத்தின்பேரில் அந்த நான்கு பேரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் டின்டர் செயலி மூலம் இளைஞரை ஏமாற்றி ரூபாய் 55 ஆயிரம் பறித்ததை அந்த நான்கு இளைஞர்களும் ஒப்புக்கொண்டனர்.

போலீஸ் விசாரணை

பின்னர், அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சர்பராஸ் புகாரி ( வயது 29). அர்பாஸ் ப்ளோஸ் ( வயது 18), இர்பான் சங்கி ( வயது 30) மற்றும் இஜாஸ் ரபாய் ( வயது 27) ஆகிய நான்கு பேரிடம் இருந்து ரூபாய் 43 ஆயிரத்து 800 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

GUJARAT, DATING APP, POLICE, YOUNGSTER, MONEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்