கொரோனா 'கன்ஃபார்ம்' ஆன ஒரே நாளுல... 'இளம்' ஊடகவியலாளருக்கு நேர்ந்த 'துயரம்'... 'அதிர்ச்சி'யை ஏற்படுத்திய 'முடிவு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத் பகுதியை அடிப்படையாக கொண்ட தெலுங்கு மொழி சேனல் ஒன்றில் பணிபுரியும் குற்றப்பிரிவு ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

தெலுங்கு செய்தி சேனலான டிவி 5 தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் இளம் ஊடகவியலாளர் மனோஜ் குமார். இவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தெரியவர உடனடியாக காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான ஒரே நாளில், மையஸ்தீனியா க்ரேவிஸ் (Myasthenia Gravis) என்னும் நிலை, அதாவது சுவாச வழித்தட தசை உட்பட அனைத்து தசைகளும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார்.

இதுகுறித்து காந்தி மருத்துவமனை துணை சூப்பரிண்டென்ட் கூறுகையில், 'மனோஜ் குமார் நிமோனியாவுடனான கோவிட்-19 (Bilateral Pnuemonia with Covid-19) காரணமாக காலையில் உயிரிழந்துள்ளார். அதே நேரத்தில் அவருக்கு ஏற்கனவே தைமஸ் சுரப்பி அறுவை சிகிட்சை செய்து தைமஸ் அகற்றப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

ஊரடங்கின் காரணமாக நாளுக்கு நாள் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி, ஊடகத்தை சேர்ந்தவர்கள் கடினமான சூழ்நிலையில் கொரோனா உறுதியான ஒரே நாளில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்திருக்கும் தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்