'இளம் பெண்ணிற்கு'...' அண்ணன்களால் நேர்ந்த கொடூரம்' ...'நெஞ்சை ரணமாக்கும்' வீடியோ காட்சிகள் !
முகப்பு > செய்திகள் > இந்தியாபட்டியலின ஆணுடன் பழகி அவருடன் சென்ற பெண்ணை, பொது வெளியில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பட்டியலின ஆணுடன் பழகியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞருடன் சென்ற அந்த பெண்ணை காணவில்லை என அவரது சகோதரர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு பின்பு, தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதையடுத்து கடந்த ஜூன் 25ம் தேதி அன்று, அந்த பெண்ணை தர தரவென இழுத்து சென்று, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ய வற்புறுத்தி, பெண்ணின் சகோதரர்கள் உட்பட அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் அடித்து துன்புறுத்தியுள்ளார்கள்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் அந்த பெண் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. நீளமான குச்சிகளை வைத்து அந்த பெண்ணின் முதுகு, கால் ஆகிய இடங்களில் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகள், காண்போரை அதிர செய்துள்ளது.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவில் உள்ள, வாகன எண்ணை வைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி பெண்ணின் 4 சகோதரர்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மிருகமாக மாறிய கல்லூரி மாணவர்கள்'...'கொலைவெறித் தாக்குதல்'... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!
- 'இப்படி பேசிக்கிட்டே இருந்தா'... 'லைவ் ஷோ'வில் அத்துமீறிய பிரபலம்'... வைரலாகும் வீடியோ!
- 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லு' ...'சிக்கிய இளைஞனின் கதி' ... 'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ!
- 'சிறுவனை கடித்து குதறிய நாய்கள்' ... 'நெஞ்சை பதற வைக்கும்' ... 'சிசிடிவி காட்சிகள்'!
- 'என்னையே கிளம்ப சொல்றியா'...'சென்னை'யில் காவலருக்கு நேர்ந்த கொடுமை'...அதிரவைக்கும் வீடியோ!
- ‘மின் கம்பத்தில் கட்டி கொடூரமாக தாக்கப்பட்ட பெண் ’.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!
- 'மாட்டு கறி'யா விக்கிற'... 'முஸ்லிம் பெண்ணிற்கு நிகந்த கொடூரம்' ... பதைபதைக்க வைக்கும் வீடியோ!
- “ஒரு நாள் வீட்டுப்பாடம் எழுதாதது ஒரு பெரிய தப்பா”!.. ‘இரக்கமின்றி மாணவிக்கு கொடூரமான தண்டனை கொடுத்த ஆசிரியர்’! பதற வைக்கும் சம்பவம்!
- “இதோ உங்கள பாக்கத்தான் வாரேன்”!.. ‘செல்ஃபி தான எடுக்கனும் வாங்க எடுக்கலாம்’!.. தொண்டர்களை காண பிரியங்கா செய்த செயல்! வைரல் வீடியோ!
- 'நீ கேட்டா நான் கொடுக்கணுமா'?...'பெண்ணிற்கு' நடந்த கொடூரம்'... பதறவைக்கும் வீடியோ!