Rahul Gandhi: "வாழ்நாள் முழுசும் தமிழ்நாட்ட உங்களால ஆள முடியாது!".. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உரை வீச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதுடெல்லி 02, பிப்ரவரி 2022:- நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குடியரசுத் தலைவர் உரை தொடர்பான விவாதத்தில் காங்கிரஸின் வயநாடு தொகுதி எம்.பி.யும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, பங்கேற்றுப் பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

2022-23 பட்ஜெட்..

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இது தொடர்பான பேச்சுகள் எழுந்துள்ளன. ஆதரவும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த பட்ஜெட்டில், நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் , 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட்

இது தொடர்பாக பேசியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட் இது என்றும், நாட்டின் பொருளாதாரத்தை இந்த பட்ஜெட் பலப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அதிக உள்கட்டமைப்பு, அதிக முதலீடு, அதிக வளர்ச்சி, அதிக வேலைகள் எனும் ஒரு கொள்கையை இந்த பட்ஜெட் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read: முகமே சுண்டி போச்சு! புது கோமாளிய கடுமையா திட்டிய Chef தாமு.. அதுக்கு அப்றம் நடந்ததுதான் ஆசம்!

மேலும் தற்சார்பு தான் இந்தியாவை வலுவாக்கும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நவீன போக்குவரத்து மற்றும் இணைப்பு முறையை எளிதாக்குவதாகவும்,  எல்லையோர கிராமங்கள் வரை இதன் மூலம் பலம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். 

ராகுல் காந்தியின் கருத்துக்கள்

இந்நிலையில் தான் பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையில் பேசப்படாத சில கருத்துக்களாக தமது கருத்துக்களை ராகுல் காந்தி முன்வைத்து பேசினார். அதில், “மேட் இன் இந்தியா இனி சாத்தியமில்லை, அந்த இந்தியாவை நீங்கள் அழித்துவிட்டீர்கள். சிறு, குறு தொழில்களை ஆதரிக்காமல் மேட் இன் இந்தியா சாத்தியமே இல்லை. சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஸ்டார்ட்-அப் இந்தியா, மேட் இன் இந்தியா பற்றி நீங்கள் ஒரு பக்கம் பேசிக்கொண்டே போகிறீர்கள். இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஓர் அரசு இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு தனி மாநிலங்களையும் ஆலோசிக்காமல், இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்கிற ஒரு பார்வையும் உள்ளது. பேச்சு வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் மாநிலங்கள் அனைத்தும் இணைந்த கூட்டணி தான் இந்தியா. எனவே இந்தியா என்பது ஒற்றை ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் கிடையாது. இதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.” என்று கூறினார்.

தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது

இதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,  “மாநில உரிமைகளை எப்படி காக்க வேண்டும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்க வேண்டும்” என்று புகழாரம் சூட்டினார். இதன் தொடர்ச்சியாக பேசிய ராகுல் காந்தி,  பாஜகவினரை நோக்கி, “வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆளவே முடியாது. முடியவே முடியாது!” என்று கூறியிருக்கிறார்.

Also Read: கைகோர்க்கும் அமீர் & வெற்றிமாறன்!.. போஸ்டர்ல இருக்குற அந்த 3வது நபர் யாரு?!

RAHULGANDHI, NARENDRAMODI, BJP, ANNAMALAI BJP, MKSTALIN, DMK, TAMILNADU BJP, BUDGET2022, PARLIMENT, பாராளுமன்றம், நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, ராகுல் காந்தி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்