கேரள நர்ஸுக்கு மரண தண்டனை.. ஏமன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. என்ன நடந்தது..? வெளியான பகீர் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள செவிலியருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நிமிஷ பிரியா (வயது 33). செவிலியரான இவர், கணவர் டாமி தாமஸுடன் ஏமனில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதி என்பவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார்.
ஏமன்
இந்த சூழலில் கடந்த 2014-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக தம்பதியினர் கேரளா திரும்பியுள்ளனர். அதன்பின்னர், கடந்த 201-ம் ஆண்டு செவிலியர் நிமிஷ பிரியா மட்டும் ஏமனுக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். கணவர் டாமி, மார்ச் மாதம் செல்ல இருந்துள்ளார். ஆனால் அப்போது ஏமனில் நடந்த போர் காரணமாக அவருக்கு விசா கிடைக்கவில்லை. அதனால் தனது குழந்தையுடன் இடுக்கியிலேயே தங்கி விட்டார்.
கிளினிக்
இதனிடையே ஏமனில் சொந்தமாக கிளினிக் வைக்க நிமிஷ பிரியா நினைத்துள்ளார். அதனால் அந்நாட்டு விதிகளின்படி, ஏமன் நாட்டைச் சேர்ந்த, தங்கள் குடும்பத்துடன் நன்கு பழகியவருமான தலால் அப்து மஹதியிடம் நிமிஷ பிரியா உதவி கேட்டுள்ளார். இதனை அடுத்து தலால் அப்து மஹதி அளித்த உதவியால் நிமிஷ பிரியா கிளினிக் வைத்துள்ளார். அந்த கிளினிக்கில் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்துள்ளது.
பிரச்சனை
அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிமிஷ பிரியாவை தலால் அப்து மஹதி வற்புறுத்தியுள்ளாற். மேலும் கிளினிக்கில் வரும் வருமானத்தை தலால் மட்டுமே எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனை அடுத்து நிமிஷ பிரியாவின் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொண்டு அவரை உடல்ரீதியாக தலால் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
கைது
மேலும் கிளினிக்கில் இருந்த பணத்தையும், நிமிஷ பிரியாவின் நகைகளையும் தலால் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தலால் மீது ஏமன் போலீஸில் நிமிஷ பிரியா புகார் செய்துள்ளார். இதனை அடுத்து தலாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்ததும், நிமிஷ பிரியாவை முன்பை விட அதிகமாக துன்புறுத்தியுள்ளார்.
தண்ணீர் தொட்டி
இதனை அடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு, தன்னுடன் பணிபுரிந்த செவிலியர் ஹனானின் உதவியுடன் தலாலுக்கு மயக்க மருந்து செலுத்தி அவரை கொலை செய்துள்ளார். பின்னர் அவரை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து தப்பிய நிமிஷ பிரியா, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனையில் செவிலியராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
செவிலியர் கைது
இந்த நிலையில், நிமிஷ பிரியாவின் பழைய கிளினிக் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தண்ணீர் தொட்டியில் கிடந்தது தலாலின் உடல்தான் என்பதும், அவரை நிமிஷ பிரியா கொலை செய்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
மரண தண்டனை
இதனை அடுத்து நிமிஷ பிரியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு நடைபெற்ற கீழமை நீதிமன்றத்தில் நிமிஷ பிரியாவுக்கு மரண தண்டனையும், உதவி செய்த ஹனானுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நிமிஷ பிரியா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக நிமிஷ பிரியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சொகுசு பஸ்ஸில் வந்த பார்சல்.. கொரியர் ஆபிஸில் வசமாக சிக்கிய தம்பதி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
- விடுதி அறையில் காதலனுடன் இருந்த இளம்பெண்.. நள்ளிரவில் ஹோட்டலுக்கு வந்த போன் கால்.. பதறியடித்த ஊழியர்கள்
- Unknown Number-ல் இருந்து வந்த மெசேஜ்.. ரிப்ளை செய்யாத 'டாக்டர்'.. அடுத்து போட்டோவுடன் இளம் பெண் அனுப்பிய மிரட்டல்.. அடுத்து நடந்தது என்ன?
- மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்.. கணவர் இன்னொரு நாட்டில் பணய கைதி.. புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்
- “நான் பெரிய ரவுடின்னு எல்லாத்துக்கும் காட்டணும்”.. திட்டமிட்டு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. கைதான நபர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!
- புருஷன் போலீசில் சிக்கிட்டா நாம ஜாலியா இருக்கலாம்.. பெண் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கியது எப்படி?
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை கஞ்சா வழக்கில் சிக்க வைத்த பெண் கவுன்சிலர்
- என் மனைவிக்கு இன்னொருத்தரோட தொடர்பு இருக்கு.. நைட்ல அடிக்கடி போன் வருது.. வேணும்னா செக் பண்ணி பாருங்க.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட சந்தோஷமா வாழல.. அதுக்குள்ள வாழ்க்கைய சுக்குநூறாக உடைத்த நபர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- மருமகள் மரணத்துக்கு மாமியார் மீது குறியா..? பைக்கில் சென்ற நர்ஸுக்கு நேர்ந்த கொடூரம்..!