'படுத்தே விட்டாரேய்யா'... சட்டமன்ற அவையில் போர்வை போர்த்திக்கொண்டு... எடியூரப்பா வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான பாரதிய ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைத்து நடத்திவரும் நிலையில், கூட்டணி கட்சியில் இருந்து 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

எனினும் இவர்களுடைய ராஜினாமா கடிதங்களை சபாநயகர் ஏற்கவில்லை. அதே சமயம், 2 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதிர்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவளித்தது குமாராசாமியின் அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனிடையே சபாநாயகர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழாமல் 3 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று  குமாராசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.

முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழாமல், அவை ஒத்திவைக்கப்பட்டதால் பாஜகவினர், சபையைவிட்டு வெளியேற மறுத்து பாஜக மாநில செயலாளர் எடியூரப்பா மற்றும் இன்ன பிற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபடும் விதமாக, அவையிலேயே படுக்கத் தொடங்கினர்.

குறிப்பாக எடியூரப்பா போர்வையை போர்த்திக்கொண்டு படுத்தேவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

BJP, KARNATAKA, YEDDYURAPPA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்