ஐயோ... கொரோனா வைரஸா...? 'அப்போ இங்க எரிக்க முடியாதுங்க...' உலக சுகாதார நிறுவனம் வழங்கும் தெளிவான நெறிமுறைகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவதாக உயிரிழந்த 68 வயது மூதாட்டியின் உடலைத் எரிக்க அங்குள்ள தகன மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மறுத்து உள்ளனர்.இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இது தொடர்பான தெளிவான நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் இதுவரை 7,166 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் இரண்டாவதாக உயிரிழந்த 68 வயது மூதாட்டியின் உடலைத் தகனம் செய்வதற்கு அங்குள்ள தகன மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.
இது தொடர்பான செய்தி ஒரு தொலைக்காட்சியில் வெளியான பிறகு, மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்புடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பரவும் வைரஸ் நோய்களால் இறப்பவர்களின் உடலை எவ்வாறு கையாள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.
அதில், `கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் உடலால் எவ்வித ஆபத்தும் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. பெரும்பாலான நுண்ணுயிரிகள் உயிரிழந்த உடலில் நீண்ட நேரம் வாழ்வதில்லை. சில விதிவிலக்குகள் உள்ளன. இவற்றில் காலரா, மூளைக்காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட சில நோய்களால் உயிரிழந்தவர்களின் உடல்களால் நோய் பரவலாம் என்பதால் அவற்றைக் கையாள வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பரவும் நோய்களால் உயிரிழந்தவர்களின் உடலைக் கையாளும் ஊழியர்கள் தங்கள் சுகாதாரத்தை முதலில் பேண வேண்டும். உடலைக் கையாளும்போது கையுறை கண்டிப்பாக அணிய வேண்டும். ரத்தம் மற்றும் உடலின் திரவங்களைத் தொட வேண்டிய நிலை வந்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்' என்று உலக சுகாதார நிறுவனம் தெளிவான நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர கண்காணிப்பு'!
- ‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு...
- 'விடாது துரத்திய 'கொரோனா'... 'பூட்டிய வீட்டுக்குள்ள தனியா இருக்கேன்'... பிரபல நடிகையின் சோக பதிவு!
- 'கொரோனா'வுக்கு எதிராக தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு!... வழிபாட்டுக்கு பின்... காத்திருந்த அதிர்ச்சி!... கதறிய பாதிரியார்!... பதைபதைக்க வைக்கும் கோரம்!
- 'சோப்பு, சானிடைசர் எல்லாம் வச்சிருக்கோம்...' 'யாரையும் அப்படியே ஊருக்குள்ள விடமாட்டோம்...' கொரோனா வைரஸை தடுக்க ஊராட்சி தலைவர் செய்த காரியம்...!
- ‘இனி நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி?’... ‘கொரோனாவின் கோரம்’... ‘விளையாட்டு உலகை கலங்கடித்த’... ‘21 வயது பயிற்சியாளருக்கு நேர்ந்த துயரம்’!
- கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ‘கிருமிநாசினி’.. கண்டுபிடித்து அசத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்..!
- 'கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு, ஆனால்...' 'இன்னைக்கு ஒருத்தர வச்சு டெஸ்ட் பண்ண போறோம்...' அமெரிக்கா சுகாதாரத்துறை தகவல்...!
- VIDEO: ‘அம்மா திரும்ப வந்தேட்டேன் தங்கம்’.. ‘கட்டிப்பிடித்து கதறிய மகன்’.. கண்கலங்க வைத்த தாய்பாசம்..!
- VIDEO: 'இத்தன ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு!'... கொரோனா அச்சுறுத்தலால்... வீட்டு ஜன்னல் வழியாக... இளைஞர்கள் செய்த சாகசம்!... 'கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா!?'