'2025' வரை பல ஊழியர்களுக்கு "Work From Home" தான்!.. பிரபல 'ஐ.டி' நிறுவனம் 'அதிரடி' முடிவு?.. என்ன 'காரணம்' தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக நாடுகள் அனைத்தையும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் அன்றி தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐ.டி உட்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைக் கண்டுள்ளது. அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊரடங்கின் போது 'ஒர்க் ஃபிரம் ஹோம்' என்ற பெயரில் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது அனைவரும் தங்களது அலுவலகங்களுக்கு சென்று பணிபுரியும் என்று ஊழியர்கள் நினைத்து கொண்டிருக்கையில் டிசிஎஸ் நிறுவனம் ஒரு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த சுமார் 75 சதவீத ஊழியர்கள் 2025 ஆம் ஆண்டு வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு நேரத்தில் தங்களது 90 சதவீத தொழிலாளர்களை வீட்டிலிருந்தே வேலை வாங்க முடிந்ததால் 2025 வரை அலுவலகத்தில் வர வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் உலகளவில் சுமார் நான்கரை லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் சுமார் மூன்றரை லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்