'அதுக்கு' 7 மணி நேரம்... 'இதுக்கு' 3 மணி நேரமா?... போராட்டக் களத்தில் குதித்த பெண்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் குறைவான மண்டலங்களில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அதிக நேரம் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மக்கள் சமூக இடைவெளியை சரிவர கடைபிடிக்காமல் இருந்ததால் மீண்டும் காய்கறி கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மூன்று மணி நேரமாக குறைத்தது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து விசாகப்பட்டினம் பகுதியிலுள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர். அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் காய்கறி மார்கெட்டுகள் மூன்று மணி நேரமும், மதுக்கடைகள் ஏழு நேரம் செயல்படுவதும் முறையில்லை. இது முற்றிலும் நியாயமானதாக இல்லை' என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா கட்டுபாடுள்ள பகுதிகளில் மதுக்கடைகள் வரும் ஏழாம் தேதி முதல் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாப்பிட உணவே இல்லை...' 'எப்படியும் சாகத்தான் போகிறோம்...' 'பட்டினியால் போராட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு...'
- கொரோனாவால் 'நிலைகுலைந்துள்ள' நாட்டில்... லாக் டவுனை 'தளர்த்த' கோரி 'போராடிய' மக்களால் 'பரபரப்பு'...
- "கொரோனா லாக்டவுன் டைம்லதான் இத பத்தி பேசணுமா?".. கருக்கலைப்பு சட்ட திருத்தத்தால் கொதித்த பெண்கள்!
- ‘அவர ஊருக்குள்ள வர அனுமதிக்க மாட்டோம்’.. கொரோனா சிகிச்சை முடிந்து ‘வீடு’ திரும்பியவருக்கு நேர்ந்த சோகம்..!
- 'வித்து' சாப்பிடக் கூட 'வழியில்லை...' 'அடகு வைக்க' கொண்டு வந்த 'அண்டாவுடன்...' 'ஒற்றை ஆளாக' போராட்டம் நடத்திய 'நபர் கைது...'
- "மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புங்கள்..." 'இது போன வாரம்...' "அமெரிக்காவிலிருந்து யாரும் மெக்சிகோவிற்குள் வரக்கூடாது..." 'இது இந்த வாரம்...' 'மாறிய வரலாறு...'
- VIDEO: 'Go கொரோனா... கொரோனா Go back!'... கொரோனா வைரஸை கண்டித்து... கோஷங்கள் எழுப்பி 'மத்திய அமைச்சர்' போராட்டம்!... இணையத்தை தெறிக்க விடும் வைரல் வீடியோ!
- "பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் தெரியுமா?..." "நிஜமாகவே செய்து காண்பித்த பெண்கள்..." ஒரே ஒருநாள் தான்... ஸ்தம்பித்துப் போன நகரம்...
- ‘இத பண்றவரை கீழ இறங்கவே மாட்டேன்’.. செல்போன் டவர் உச்சிக்கு சென்ற இளைஞரின் பரபரப்பு நிமிடங்கள்..!
- 'பால் வாங்க சென்ற 15 வயது சிறுவன்'... ‘அவனுக்கு ஏன் இப்டி நடக்கணும்'... 'கதறித் துடிக்கும் குடும்பம்'!