'ரயில்நிலையம்' மற்றும் வளாகங்களில் '136'... 'ஓடும் ரயிலில் 29'.... 'மொத்தம் 165'... பெண்களுக்கான தேசத்தில் நிகழ்ந்த 'அவலங்கள்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரெயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலியல் வன்கொடுமை அல்லாமல் பெண்களுக்கு எதிராக ரயில் நிலையங்களில் நடந்த குற்றங்கள் தொடர்பாக 802 வழக்குகளும், ஓடும் ரெயிலில் நடந்த குற்றங்கள் தொடர்பாக 871 வழக்குகளும் என மொத்தம் 1672 பதிவாகி உள்ளது.
அதேபோன்று கடந்த 3 ஆண்டுகளில் 771 கடத்தல் வழக்குகளும், 4,718 வழிப்பறி வழக்குகளும், 213 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகி உள்ளது. ரெயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரெயில்கள் என மொத்தம் 542 கொலைகள் நடந்து உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆளில்லா ரயில்வே பிளாட்ஃபார்மில்’.. ‘தனியே சென்ற இளம் பெண்’.. பின்னால் சென்ற வாலிபர் செய்த பதைபதைப்பு சம்பவம்!
- ‘திடீரென ரயில் நிலையத்தில்’.. ‘வெடித்துச் சிதறிய பார்சலால் பரபரப்பு’..
- ‘சாப்பாடு வேணுமா’ன்னு கேட்டது ஒரு குத்தமா..! சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே கால்டாக்ஸி டிரைவருக்கு நடந்த பயங்கரம்..!
- 'திருடங்கிட்டயே திருட்டா?'.. சென்னை பெண் போலீஸ் செய்த காரியம்.. சிக்கிய சிசிடிவி!
- 'உயிரையே' காப்பாத்திய... அந்த ஒரு 'செல்ஃபி' .. நண்பர் செய்த அற்புதமான காரியம்!
- அடடா..! ஒரு எழுத்துல உலக சாதனையை பறி கொடுத்த சென்னை சென்ட்ரல்!
- ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்’.. பிரதமர் மோடி அறிவிப்பு!