'குவாரண்டைன்' மையத்தில் வெளிப் பெண்கள் அழைத்துவரப்பட்டு 'குத்தாட்டம்!'.. 'நடவடிக்கை பாய்வதோடு', அதிகாரி அளித்த 'மாற்று' சலுகை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் பொழுதுபோக்கிற்காக பெண்களை நடனம் ஆட வைத்ததுள்ள சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவது தடைவிதிக்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் முன்னதாக 3-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டிருந்த  ஊரடங்கு, பின்னர் மே 17-ஆம் தேதி வரையிலும் தற்போது மே மாத இறுதிவரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பும், நோய் தொற்றும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் ஆங்காங்கே உள்ள தனிமைப்படுத்தப்படுவோர் மையங்களில் வைக்க தங்க வைக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் காராகா என்கிற இடத்திலும் இதேபோல் மாநில அரசின் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பலரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று இரவு அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்த சிலர் பொழுதுபோக்கிற்காக வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்து இந்த நடன நிகழ்ச்சியை நடத்தியதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கூடுதல் ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசும்போது, “கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் இது போன்ற பொழுதுபோக்கு நடன நிகழ்ச்சி நடத்தியதை ஏற்க முடியாதது” என்றும் “அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறியதோடு,  “எனினும், இனிமேல் தனிமைப்படுத்தும் மையங்களில் பொழுதுபோக்கிற்காக டிவி பெட்டிகள் வைக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்