'அலறல்' சத்தம் கேட்டது.. எரிந்த நிலையில் 'இளம்பெண்' சடலம்.. மேற்கு வங்கத்தை 'அதிரவைத்த' கொலையாளிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள மாந்தோப்பில் நேற்று இளம்பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், '' 2 நாட்களுக்கு முன் மாந்தோப்பில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. ஆனால் நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது யாரையும் அங்கு காணவில்லை. இந்த இடத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் நாங்கள் போலீஸ் செக்போஸ்ட் ஒன்று அமைக்க சொல்லி நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்,'' என்றனர்.
இந்த சம்பவம் குறித்து மால்டா எஸ்.பி அசோக் ரஜாரி கூறுகையில், '' அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்தன. அவரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரேத பரிசோதனைக்காக அவரை மால்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துளோம். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? எனபது குறித்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.
இதுகுறித்து மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ''பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த வன்முறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என போலீஸாருக்குத் தெரிவித்துள்ளேன்,'' என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, உத்தர பிரதேசத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இளம்பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெண் மருத்துவர் வழக்கில்.. என்கவுண்டரில் 'சுட்டு' கொல்லப்பட்டவர்களின்.. 'புகைப்படங்கள்' வெளியீடு
- ‘மீண்டும் ஒரு தெலுங்கானா’! ‘பாலியல் வன்கொடுமை செய்து பெண் எரிப்பு’.. 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் இளம்பெண்..!
- 'இறந்து' கிடந்தவர்களின்.. 'கைகளில்' ஆயுதங்கள்.. வைரலாகும் வீடியோ!
- ‘என்கவுன்டர்’ நடந்தது ‘எதனால், எப்படி?’.. ‘உண்மையை’ உடைத்த காவல் ஆணையர் ‘சஜ்ஜனார்!’..
- 'அவங்கள' கூட்டிப்போங்க.. எப்படியும் 'ஓட' பாப்பாங்க..முதல்வர் மகனுக்கு 'ஐடியா' .. அதேபோல 'நடந்த' என்கவுண்டர்!
- '4 பேரையும் அநியாயமா கொன்னுட்டாங்க'...'இதுக்கு கொண்டாட்டமா?...கொதித்த மனித உரிமை ஆர்வலர்கள்!
- 'தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு புதிய பதவி'...மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!
- Video: என் புருஷன 'கொன்ன' எடத்துல.. என்னையும் சுட்டு கொன்னுடுங்க.. மனைவி கண்ணீர்!
- திருமணத்தின்போது ‘நடனமாடுவதை நிறுத்தியதால்’.. இளம்பெண் ‘முகத்தில் சுட்ட பயங்கரம்’.. ‘பதறவைக்கும்’ வீடியோ..
- 'மரணதண்டனை' உறுதி.. நேற்றிரவே என்கவுண்டர் குறித்து.. 'க்ளூ' கொடுத்த போலீஸ்!