'இவ்ளோ நேரமா ஆபீஸ்ல வொர்க் பண்ணுவ?'... 'ஆத்திரத்தில்' கணவன் செய்த 'வெறிச்செயல்'.. பதற வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனேவில் உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாடு ( Pimpri Chinchwad)பகுதியைச் சேர்ந்தவர் ஹனுமந்த் பாபுராவோ லோகந்த் (Hanumant Baburao Lokhande). திருமணமாகி 20 வருடங்கள் கடந்த நிலையில், தற்போது 58 வயதாகியுள்ள இவர், 40 வயதாகவும் தனது மனைவி ஷைலாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு இளம் மகன் உள்ளார்.
அப்பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஹனுமந்த், இன்று அதிகாலை 4 மணி அளவில், தனது மனைவி ஷைலாஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பேச்சு முற்றிப் போயுள்ளது. வீட்டின் முதல் மாடி தளத்தில் வசித்து வந்த இவர்களது மகன் சத்தம் கேட்டு, படிக்கட்டு வழியே கீழே வந்துள்ளார்.
ஆனால், கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததால், பக்கவாட்டில் இருந்து ஜன்னல் வழியே சென்று பார்த்துள்ளார். அப்போது தன் தாய் ஷைலாவை, தனது தந்தை ஹனுமந்த் கடுமையாக நடத்துவதாக சத்தம் கேட்கவே, வேறு வழியில்லாமல் ஜன்னலை உடைத்துள்ளார். அப்போது ஹனுமந்த், ஷைலாவை அரிவாளால் வெட்டிக் கொன்றுகொண்டிருந்துள்ளார்.
கண்முன்னே இந்த சம்பவத்தை பார்த்த, இவர்களது மகன் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து ஹனுமந்த்தை கைது செய்ததோடு, ஷைலாவின் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பேசிய ஹனுமந்த், ‘காலையில் 7, 8 மணிக்கு வேலைக்கு சென்றால் எனது மனைவி வீட்டுக்கு திரும்பவே 12 மணி நேரம் ஆகிவிடுகிறது, இதனால் அவளுடன் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் அரிவாளாள் வெட்டிக்கொன்றேன்’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குழந்தைகளை பார்க்க வந்த தாய்... கணவர் செய்த அதிர்ச்சி காரியம்... மனைவிக்கு நேர்ந்த சோகம்!
- '2 பேரும் உயிரை மாய்ச்சுக்கலாம்!'.. 'விஷம்' கலந்த 'வாழைப்பழம்' கொடுத்த 'காதலன்'.. நம்பி சாப்பிட்ட காதலிக்கு நேர்ந்த 'கொடூரம்'!
- 'வேறு மாவட்டத்துக்கு கூட்டிச் சென்று'.. 'கணவர் செய்த காரியம்'.. 'மணமாகி ஒரே வருஷத்தில்' இளம் பெண்ணுக்கு நடந்த துயரம்!
- VIDEO: ‘கணவர் பிறந்தநாள் கொண்டாட்டம்’!.. ‘வேறலெவல் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி’!.. வைரல் வீடியோ..!
- ‘கொலுசை அடகு வைத்து குடித்த கணவன்’! ‘மனைவி கொடுத்த கொடூர தண்டனை’.. விழுப்புரம் அருகே பரபரப்பு..!
- ‘வீட்டில் அடிக்கடி தகராறு’! கொதிக்கும் எண்ணையை கணவன் மீது ஊற்றிய மனைவி..! சென்னையில் பரபரப்பு..!
- 'கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க?'.. இளம் பெண்ணின் விபரீத முடிவு.. தாலி கட்டியதும், ஓட்டம் பிடித்த கணவன்!
- ‘சாக்கடை குழிக்குள் சிக்கிய சிறுவன்’! ‘மீட்க சென்ற வீரர்களை மண் மூடிய பரிதாபம்’! நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- 'எவ்ளோ தெரியுமா?'.. டாஸ்மாக்கில் உளறிய போதை ஆசாமி!.. வீடு தேடிவந்த மர்ம நபர்களால் சோகம்'!
- 'எங்க பொண்ண நாங்க பாத்துக்குறோம்!'.. 'வரதட்சணை கொடுமை' செய்த குடும்பம்.. பெண் வீட்டாரின் 'நெகிழவைக்கும்' தண்டனை!