அண்ணனோட கல்யாணம்.. வெளிநாட்டுல இருந்து சர்ப்ரைஸா வந்து நின்ன தங்கச்சி.. அப்பா கொடுத்த ரியாக்ஷன் தான்😍.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாட்டில் இருந்து தனது சகோதரருடைய திருமணத்திற்கு சர்ப்ரைஸாக சென்றதாக பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 'வாத்தி' விக்ரமன் மற்றும் ஷிவினின் உதவி.. 'வயிறார' வாழ்த்திய குழந்தைகள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் வீடியோக்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அந்த வகையில் தனது சகோதரரின் திருமணத்திற்கு சர்ப்ரைஸாக சென்றதாக பெண் ஒருவர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக திருமணம் என்றாலே சொந்த பந்தங்கள் கூட்டமும் பல மகிழ்வான தருணங்களின் வெளிப்பாடாகவும் இருக்கும். ஆனால், நமது அன்புக்குரியவர்கள் அந்த தருணத்தில் நம்முடன் இல்லை என்றால் நிச்சயம் அது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், ஷ்ரத்தா ஷெலெர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய சகோதரரின் திருமணத்துக்கு தான் சர்ப்ரைஸாக செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
பெர்மிங்கம் விமான நிலையத்தில் துவங்கும் இந்த வீடியோ திருமண மண்டத்தில் முடிவடைகிறது. விமான பயணத்தை முடித்து திருமணம் நடைபெறும் இடத்துக்கு செல்லும் ஷ்ரத்தாவை கண்டு அவரது உறவினர்கள் திகைத்துப் போகிறார்கள். அப்போது அவருடைய தாய் மற்றும் தந்தை கண்கலங்கியபடி ஓடிச் சென்று கட்டியணைத்துக்கொள்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அதன்பின்னர் அவரை கண்ட மணமகன் ஓடிவந்து கட்டியணைத்துக்கொள்கிறார். அப்போது அங்கிருந்த அனைவரும் இதை கண்டு நெகிழ்ந்து போகின்றனர். அந்த பதிவில் தன்னுடைய இந்த பயணத்திற்கு உதவி செய்த தனது நண்பர்களை குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்திருக்கிறார் ஷ்ரத்தா. மேலும் அந்த பதிவில்,"ஆச்சர்யமான பயணத்தின் பின்னணியில் உள்ள கதை இது. நீங்கள் எங்கிருந்தாலும் குடும்பம் மிகவும் முக்கியமானது, எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். எப்போது எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியாத நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | உறைந்து போன நகரம்.. 5 நிமிஷம் வெளியே போனாலும் ரிஸ்க்.. வரலாற்றுல இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லயா ?
மற்ற செய்திகள்
உறைந்து போன நகரம்.. 5 நிமிஷம் வெளியே போனாலும் ரிஸ்க்.. வரலாற்றுல இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லயா ?
தொடர்புடைய செய்திகள்
- 4 வயசு தான்.. ஐன்ஸ்டீனையே மிஞ்சிடுவான் போலயே.. மூளை திறனை டெஸ்ட் பண்ணிட்டு உறைந்துபோன அதிகாரிகள்..!
- கைவிட்ட கணவன்.. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை.. எக்குத்தப்பா அடிச்ச அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரி..!
- குழந்தைக்கு பெயர் தேடிய போது.. கணவர் பற்றி தெரிய வந்த அதிர்ச்சி கலந்த உண்மை!!.. "இது தெரியாம கல்யாணமும் நடந்துடுச்சே"
- "அட இது தெரியாம இருந்துட்டேனே".. ஒரே லாட்டரியில் 385 கோடி ரூபாய்.. பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்!!
- "சீட் பெல்ட் போடல".. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த காவல்துறை.. வீடியோ..!
- "உங்க வீட்டுக்குள்ள புதையல் இருக்கு".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- கையிலே ஆகாசம்.. முதன்முதலில் மகள் ஓட்டிய விமானத்தில் பயணித்த அப்பா.. .. நெகிழ்ச்சி வீடியோ..!
- படிச்சது MA .. பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை.. எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு ரோட்டுக்கடை தொடங்கிய பெண்.. நெகிழ வைக்கும் காரணம்!
- "7 வருசமா இந்த Building கீழ தான் இருந்துருக்கு".. அடித்தளத்தில் இருந்த விஷயம்.. பீதியில் உறைந்த தொழிலாளர்கள்!!
- இப்படியா சாப்பாடு போடுவீங்க.. காதலன் வீட்டில் அளித்த விருந்தால் 'பிரேக் அப்’ பண்ணிய காதலி.!