காதல் செய்ததால் குடும்பத்தை பிரிந்த பெண்.. 56 வருஷம் கழிச்சு நடந்த எமோஷனல் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே அமைந்துள்ள மேலக்கரந்தை என்னும் பகுதியை சேர்ந்தவர் நம்மாழ்வார் (வயது 80). இவரது மனைவி பார்வதி (75).

Advertising
>
Advertising

நம்மாழ்வார் - பார்வதி தம்பதிக்கு சண்முகராஜ் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கவுரி பார்வதியின் பூர்வீகம், ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசிப்பட்டணம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 1960 ஆம் ஆண்டின் போது, நரசிபட்டணம் பகுதிக்கு நம்மாழ்வார், உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக சென்றுள்ளார். அப்போது, அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கவுரிக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு காவிரியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 1966 ஆம் ஆண்டு, மேலக்கரந்தைக்கு அவரை அழைத்து வந்து திருமணம் செய்துள்ளார் நம்மாழ்வார்.

தமிழ்நாட்டிற்கு வந்து விட்ட கவுரி பார்வதி, மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்றால், நம்மாழ்வாரிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருந்து வந்துள்ளார். அதே சமயம், தனது சகோதரர் மற்றும் சகோதரிகளை பார்க்கவும் ஏங்கி வந்துள்ளார் கவுரி.

தனக்கு திருமணமாகி, பேரன் பேத்திகள் தொடங்கி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி பார்த்த பின்னரும் தனது பூர்வீக சொந்தங்கள் குறித்து தெரியாமலே இறந்து போய் விடுமோ என்றும் கவுரி வேதனையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தாயின் வேதனையை அறிந்த மகன் சண்முகராஜ், ஆந்திர மாநிலம் நரசிபட்டணம்  சென்று, கவுரியின் குடும்பத்தினரை தேடிக் கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த முயற்சியில், சண்முகராஜிற்கு வெற்றியும் கிடைத்துள்ள நிலையில், சுமார் 56 ஆண்டுகளுக்கு பிறகு, கவுரி பார்வதியின் மகனை பார்த்த உறவினர்கள், தங்கள் யார் என்பதை தெரியப்படுத்தி மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வேன் பிடித்து, சில தினங்களுக்கு முன்பாக மேலக்கரந்தை பகுதிக்கும் வந்து கவுரி பார்வதியை நேரில் சந்தித்துள்ளனர்.

தனது குடும்ப உறவினர்களை அவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திய கவுரி பார்வதி, ஆனந்த கண்ணீரில் நனைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இதனை ஒரு குடும்ப விழா போல எடுத்த அவர்கள், இரு சொந்தங்களும் கூடி நம்மாழ்வார் - கவுரி பார்வதி தம்பதியிடம் ஆசி பெற்று மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்தி, பலரது மனதையும் உருகும் வகையில் உள்ளது.

LOVE, FAMILY, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்