4 டோஸ் தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு கொரோனா.. ஏர்போர்ட்டிலேயே தடுத்து நிறுத்திய அதிகாரிகள்.. என்னென்ன தடுப்பூசி தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நான்கு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண்ணுக்கு கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

துபாயை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றிருந்த போது 4 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அதில் சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை 2 டோஸ்களும், சைபர் தடுப்பூசியை 2 டோஸ்களும் செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் மஹவ் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, அப்பெண் இந்தூரில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு செல்ல இருந்துள்ளார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விமான நிலையத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 4 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டது தொடர்பாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CORONA, VACCINATED, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்