எதுக்கு என் நம்பரை Block செஞ்ச?.. நண்பனின் வீட்டுக்கு வந்து கேள்விகேட்ட இளம்பெண் செஞ்ச பகீர் காரியம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் நண்பர் தன்னை வாட்ஸப்பில் பிளாக் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 2 நாட்டையும் இணைக்கும் பிரம்மாண்ட Tunnel.. போதை ஆசாமிகளை பிடிக்கப்போன அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்..உள்ளே இருந்த பலே டெக்னாலஜி..!

மும்பையின் புறநகர் பகுதியான தஹிஸாரில் இருக்கிறது அந்த இளைஞரின் வீடு. இவருக்கும் மும்பையைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒருவரது திருமணத்திற்கு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்து இளைஞரின் வீட்டிற்குச் சென்ற அந்த இளம்பெண் காலையில் தனது வீட்டிற்குச் செல்வதாக கூறியதாகவும் அதற்கு அந்த இளைஞர் மறுப்புத் தெரிவித்ததுடன் உடனடியாக வீட்டிற்குச் செல்லும் படியும் அறிவுறுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிளாக்

இதனால் அந்த இளைஞரின் வீட்டிலிருந்து கிளம்பிய இளம்பெண் சிறிது நேரத்தில் அந்த இளைஞருக்கு போன் செய்திருக்கிறார். பலமுறை போன் செய்தும் அவர் எடுக்காததால் வாட்ஸப் மூலமாக அந்த இளைஞரை தொடர்புகொள்ள இளம்பெண் முயற்சித்திருக்கிறார். அப்போது இளம் பெண்ணுடைய நம்பரை வாட்ஸப்பில் அந்த இளைஞர் பிளாக் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் மீண்டும் அந்த இளைஞர் அது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அவரிடம் ஏன் தனது நம்பரை வாட்ஸப்பில் பிளாக் செய்தாய் என அந்த இளம்பெண் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

அதிர்ச்சி

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் இளம்பெண்ணை சமாதனப்படுத்தி அங்கேயே தங்க வைத்திருக்கிறார் இளைஞர். இந்நிலையில் நேற்று காலை இளைஞர் எழுந்து பார்த்தபோது அந்த இளம்பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போரிவாலி பகுதியைச் சேர்ந்த ரயில்வே போலீசார் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இளைஞரின் வீட்டை பரிசோதித்த அதிகாரிகள் இளம்பெண் கடிதம் ஏதும் எழுதவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நண்பர் தனது நம்பரை வாட்ஸப்பில் பிளாக் செய்த நிலையில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மும்பை பகுதி மக்களையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

MAHARASHTRA, WOMAN, BAD DECISION, BOYFRIEND, WHATSAPP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்