"என்னோட போட்டோ தான், ஆனா...!" - 'வாட்ஸ் அப், பேஸ்புக்ல வலம் வந்த பகீர் விளம்பரத்தால்'... 'உறைந்து நின்ற ஐடி பெண்!!!' - அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நொய்டாவில் பெண் ஒருவருடைய புகைப்படம் பாலியல் தொழில் செய்யும் கும்பலால் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 40 வயதான பெண் ஐடி ஊழியர் ஒருவர் போலீசாரிடம் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், "இணைய வழியில் மோசடியாக பாலியல் தொழில் செய்யும் கும்பல் ஒன்று என்னுடைய புகைப்படங்களை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் ஒரு தொலைபேசி எண்ணுடன் பரப்பி வருகிறது. நான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்களை பயன்படுத்தி அந்த கும்பல் என்னைப் பற்றி விளம்பரம் செய்து, பணம் வசூலித்து மோசடி செய்து வருகிறது.

2 குழந்தைகளுக்கு தாயான என்னுடைய புகைப்படத்தை அதுபோன்ற ஒரு மோசமான பதிவில் பார்த்து அதிர்ந்துபோன நண்பர்கள் சிலரே எனக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். பின்னர் நான் அதை பார்த்தபோது அதில் என்னுடைய புகைப்படத்துடன் வேறு யாருடைய நம்பரோ கொடுக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து என்னுடைய நண்பர் ஒருவர் அந்த எண்ணிற்கு அழைத்துப் பேசியபோது, என்னை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி ஒரு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கேட்டார்கள். அவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அந்தப் பெண், "போலீசார் என் புகாரை சைபர் பிரிவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். அங்கிருந்து புகாரை நடைமுறைப்படுத்த 15 நாட்கள் ஆகும் எனக் கூறியுள்ளனர். இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்