‘பிரபல கம்பெனி’.. ‘கை நிறைய சம்பளம்’.. ஒரே ஒரு போன்காலால் ‘ஐடி’ பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் 11 லட்சம் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புனே அருகே உள்ள ஹடப்சரில் வசிக்கும் 43 வயதான பெண் ஒருவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடும் போர்டலில் தனது சுயவிபரங்களை பதிவு செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் இப்பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், ஒரு பிரபலமான நிறுவனத்துக்கு வேலைக்கு ஆள்கள் எடுப்பதாகவும், அதில் அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணை தங்களது இணையதளத்துக்கு சென்று அங்கு குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கில் சுமார் 11 லட்சத்தை கட்டணமாக ஆன்லைனில் செலுத்த சொல்லியுள்ளார். இதனை நம்பிய அப்பெண் அவர்கள் கேட்ட அந்த பணத்தை அப்படியே அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்ற பிறகு அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.

இதனால் அந்த நபரை மீண்டும் அழைத்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனை அடுத்து ரூ.3,39,014 பணத்தை திரும்ப கொடுத்துள்ளனர். ஆனால் மீதமுள்ள பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். பலமுறை தொடர்பு கொண்டும் அப்பெண்ணுக்கு பணம் கிடைக்கவில்லை.

திடீரென அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போகவே, இவை அனைத்தும் போலி என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல் நிலையத்தில் இதுதொடர்பாக அப்பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்